கனடாவில் நீண்ட காலமாக இயங்கிவரும் சேவைகள் வழங்கும் நிறுவனமான ‘தென்மராட்சி நிறுவனம்- கனடா இயக்குனர் சபை நடத்திய ஒன்றுகூடலு; நிகழ்வும் இராப்போசன விருந்தும் கடந்த திங்கட்கிழமை ஸ்காநடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக அவுஸ்த்திரேலியா வாழ் பொறியியலாளர் கருணாகரன் நடராஜா அவர்கள் கலந்து சிறப்பித்தார். நிறுவனத்தின் தலைவரும் தொழிலதிபருமான தேவதாஸ் (தாஸ்) அவர்கள் தலைமையுரையாற்றினார். அவர் தனது உரையில் தென்மராட்சி சேவை நிறுவனம் ஊடாக தாயகத்தில் தென்மராட்சி பிரதேசத்தில் பல அபிவிருத்தி மற்றும் வாழ்வாதார கல்வி சார்ந்த உதவிகள் வழங்குவதில் நிறுவனம் ஈடுபட்டுள்ளதாகவும் அதற்கு கனடாவில் நண்பர்களின் ஆதரவு கிட்டிவருவதாகவும் தெரிவித்தார்.
நிறுவனத்தின் போசகர் திரு வினாசித்தம்பி துரைராஜாவும் கருத்துரை வழங்கினார்.
அங்கு கலந்து கொண்ட பலர் நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் சேவைகளுக்கும் ஆதரவு தருவதாக உறுதியளித்தார்.
அங்கு கலந்து கொண்ட கனடாவில் இயங்கும் ‘இலங்கை முன்னாள் வர்த்தகர்கள் சங்கம்- கனடா’ அமைப்பின் சார்பில் 1000 டாலர்கள் தென்மராட்சி சேவை நிறுவனத்திற்கு வழங்கப்பெற்றது.
அத்துடன் தென்மராட்சி சேவை நிறுவனம்- கனடா அமைப்பின் வளர்ச்சியில் பங்கெடுத்த உறுப்பினர்கள் பலரும் கௌரவிக்கப்பெற்றனர்.
Arjune. LJI-uthayannews