(04-01-2023)
முன்னாள் பரிசுத்த பாப்பரசர் 16 ஆம் பெனடிக்ட் திருத்தந்தை இறைபதமேந்தியதையொட்டி அவருக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (04) முற்பகல் கொழும்பிலுள்ள அப்போஸ்தலிக்க தூதரகத்திற்கு விஜயம் செய்தார்.
இலங்கைக்கான வத்திக்கான் அப்போஸ்தலிக்க தூதுவர் புனித பிரையன் உடேக்வே ஆண்டகையை சந்தித்த ஜனாதிபதி, அவருடன் சிறு உரையாடலில் ஈடுபட்டார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க , அங்கு வைக்கப்பட்டுள்ள விசேட நூலில் குறிப்பொன்றையிட்டதுடன், பதினாறாம் பெனடிக்ட் பரிசுத்த பாப்பரசரின் புகைப்படத்திற்கும் அஞ்சலி செலுத்தினார்.