வலி வடக்கு மீள் குடியேற்ற செயல் வீரரும் சமூகத் தொண்டரும் மீனவச் சமூகத்தின் உரிமைகளுக்காகப் போராடியவருமான மயிலிட்டி அ. குணபாலசிங்கம் அமரரானார் என்ற செய்தி அவரை நேசித்தவர்கள் வாழும் உலகெங்கும் விரிந்து நிற்கின்றது.
அன்னாரை எனது மாணவப் பருவத்திலிருந்தே நன்கு அறிவேன். காங்கேசன்துறை அமெரிக்க மிஷன் பாடசாலையின் முக்கியமான பழைய மாணவர்களில் ஒருவரும் பிரபல மீனபிடித் தொழில் சம்மாட்டியாருமான திரு அருணாசலம் அவர்களின் மூத்தவாரிசுமாவார்.
பள்ளி நாட்களில் தலைமை ஆசிரியராகவிருந்த திரு ரிச்சார்ட் சுப்பிரமணியம் அவர்களின் தலை சிறந்த மாணவத் தலைவராகவும் சுறுசுறுப்பான இளைஞராகவும் வலம் வந்தவர் இந்தப் பெருமகன். தமிழீழம் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கட்டுப்பாட்டில் இயங்கிய காலத்திலும் பின்னர் வடக்கு ஆளுனர் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் அரசாங்க அதிபர் தொடக்கம் அரசியல் தலைவர்களுடனும் அரச அதிகாரிகளுடனும் தொடர்புகளைப் பேணியவண்ணம் தனத சமூக மக்களுக்காக குரல் கொடுத்தவர் அமரர் மயிலிட்டி அ. குணபாலசிங்கம் அவர்கள்.
மக்களின் காணிகளை இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்து மீட்டு அவர்கள் மீளக்குடியேறுவதற்கு வழிசமைத்தவர் செயல் வீரர் மயிலிட்டி அ. குணபாலசிங்கம் என்றால் அது மிகையாகாது.
அவரத மறைவானது காங்கேசன்துறறு மயிலிட்டி வாழ் மக்களுக்கும் வலிவடக்கு மீள்குடியேற்ற வாசிகளுக்கும் பேரிழப்பாகும். அத்துடன் அன்னாராது பொது வாழ்வானது எவராலும் மறக்க முடியாத பெருமை மிகு பெருவாழ்வாகும்.
இங்கே காணப்படும் படத்தில் 2015ம் ஆண்டில் யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற வீணைமைந்தன் அவர்களின் நூல் வெளியீட்டு விழாவில் மயிலிட்டி அ. குணபாலசிங்கம் அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் பேராசிரியர் என். சண்முகலிங்கன் அவர்களிடமிருந்து நூல் பிரதிகளைப் பெற்றுக் கொள்வதைக் காணலாம்.
கே. ரி. சண்முகராஜா (வீணைமைந்தன்)_ கனடா