வெற்றிகரமாக ஏற்பாடு செய்து மகிழ்ந்த நண்பர் விமல் மற்றும் அவர் ‘பாரம்பரியப் படையணி
நேற்று சனிக்கிழமையன்று 7ம் திகதி கனடாவின் ஸ்காபுறோ நகரில் அமைந்துள்ள ‘சீனக் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்ற ‘அனலை எக்ஸ்பிறஸ்’ சர்வ தேச தொலைக்காட்சி ஊடக நிறுவனம் படைத்தளித்த ‘பாரம்பரியம்’ முழு நீள முத்தமிழ் விழா வரலாறு படைத்தது என்றே கூறவேண்டும். 500 இற்கும் அதிகமான இளைய தலைமுறை இசை நடன வாத்திய கலைஞர்கள் பங்கெடுத்த இந்த முழு நீள நுண்கலை முத்தமிழ் விழா தொடர்ந்தும் வருடா வருடம் நடத்தப் பெற வேண்டும் என்ற வேண்டுகோள் அனைத்து தரப்பினராலும் விடுக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்..
இந்த அற்புதமான ‘பாரம்பரியம்’ என்னும் முத்தமிழ் விழாவை வெற்றிகரமாக ஏற்பாடு செய்து மகிழ்ந்த நண்பர் விமல் அவரது துணைவியார் மற்றும் அவர் ‘பாரம்பரியப் படையணியை எத்தனை வார்த்தைகளால் பாராட்டினாலும் தகும் என்ற வார்த்தையைத் தவிர எமக்கு வேறு ஒன்றும் தோன்றவில்லை.
சீனக் கலாச்சார மண்டபமும் அதன் வளாகமும் அதிரும் வகையில் ஸ்காபுறோவி;ல் நடத்தப்பெற்ற முதல் முத்தமிழ் விழா ‘பாரம்பரியம்’ என்றால் அது பகட்டுக்காக எழுதும் வார்த்தைகள் அல்ல என்பது நேற்று இந்த விழாவைக் கண்டு களித்தவர்களுக்கு நன்கு புரியும்.
கனடா உதயன் பத்திரிகையும் இந்த விழாவின் அச்சு ஊடகம் சார்பான ஒரு அனுசரணையாளர் என்பதிலும் அந்த நிறுவனத்திற்கு அனலை எக்ஸ்பிறஸ் அளித்த கௌரவமும் என்றும் நினைவில் இருக்கும் என்பதே எமது கருத்தாகும்-
CANADA UTHYAAN