முன்னாள் மார்க்கம் மாநகர சபை உறுப்பினரும் தற்போதைய ஒன்றாரியோ மாகாண சபையின் மார்க்கம்- தோர்ன்ஹில் தொகுதி உறுப்பினருமான லோகன் கணபதி அவர்களின் ஏற்பாட்டிலும் தலைமையிலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை 8ம் திகதி இடம்பெற்ற ‘மார்க்கம் தைப் பொங்கல் விழா’ 2022 மிகவும் சிற்ப்பாக நடைபெற்றது
பிற்பகல் 3.00 தொடக்கம் இரவு 11.00 மணி வரை இடம் பெற்ற இந்த விழாவில் முத்தமிழின் அழகையும் ஆழத்தையும் அற்புதத்தையும் தெளிவாக விளக்கும் வண்ணம் பல கலைப் படைப்புக்கள் மேடையேற்றப்பெற்றன.
ஒன்றாரியோ மாகாண சபை உறுப்பினர் லோகன் கணபதி அவர்களின் அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் மார்க்கம் தைப்பொங்கல் விழாவிற்கு அத்திவாரமாய் விளங்கிய பல தமிழ் அன்பர்கள் இந்த விழாவின் வெற்றிக்கு காரணமாய் இருந்தார்கள் என்றால் அது மிகையாகாது.
இந்த விழா பல அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டு தங்கள் வாழ்த்துரைகளை வழங்கினார்கள்.
குறிப்பாக ஒன்றாரியோ மாகாணத்தின் கல்வி அமைச்சர் கௌரவ ஸ்டிபன் லெட்சே அவர்களும் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய பி;ன்னர் பல கலைஞர்களுக்கான கௌரவத்தையும் வழங்கினார்.
இங்கே காணப்படும் படங்கள் அங்கு எடுக்கப்பட்டவையாகும்.