பல்வேறு தமிழ் அமைப்புக்களின் ஆதரவோடு மொன்றியால் மாநகரில் எதிர்வரும் 15-01-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறவுள்ள ‘ தமிழ் மரபுத் திங்கள்’ கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ளவுள்ள நீயா நானா?” புகழ் கோபிநாத் அவர்கள் தற்போது கனடா நோக்கிய விமானப் பயணத்தில் பறந்து கொண்டிருக்கின்றார் என்ற செய்தி சற்று முன்னர் மொன்றியால் ‘ தமிழ் மரபுத் திங்கள்’ கொண்டாட்டத்தின் ஏற்பாட்டாளர்களுக்கு கிட்டியுள்ளது.
மொன்றியால் மாநகரில் நடைபெறவுள்ள சிறப்புக்கள் நிறைந்த இந்த விழாவில் கனடாவின் மத்திய பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி உட்பட பல அரசியல் பிரமுகர்கள் கலந்து கொள்ளவுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை எதிர்வரும் 14ம் திகதி சனிக்கிழமையன்று ஸ்காபுறோ நகரில் சீனக் கலாச்சார மண்டபத்தில் நடைபெறவுள்ள விழாவிலும் சிறப்புப் பேச்சாளராக கோபிநாத் அவர்கள் கலந்து கொள்ளவுள்ளார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது