(மன்னார் நிருபர்)
(17-01-2023)
மன்னாரில் குட்டி ஈன்று சில மாதங்களான பசுமாட்டைத் திருடி இறைச்சிக்கு வெட்டுவதற்கு தயாராக இருந்த நிலையில் குறித்த பசுவை பெரும் சிரமத்திற்கு மத்தியில் உரிமையாளர் மீட்டுள்ளார்.
இந்த சம்பவமானது மன்னார்- நானாட்டான் பிரதேசத்திற்கு உட்பட்ட மடுக்கரைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,,,
கடந்த சனிக்கிழமை (13) மடுக்கரையில் மேய்ச்சலுக்கு சென்ற பசு மாட்டைக் காணாமல் உரிமையாளர் தொடர்ச்சியாக தேடியுள்ளார்.
எங்கும் கிடைக்காத நிலையில் மறு நாள் ஞாயிற்றுக்கிழமை (15) மடுக்கரை அருவி ஆற்றங்கரையின் மாடு ஒன்று கட்டி இழுத்து மறு கரைக்குச் சென்ற தடயத்தை பசு உரிமையாளர் கண்டு பிடித்துள்ளனர்.
ஆற்றங்கரையின் மறு பக்கம் உள்ளது முசலி பிரதேசம். பசு முசலி பிரதேசத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இருப்பதை உறுதிப் படுத்திய உரிமையாளர்கள் முசலிப் பிரதேசத்தில் உள்ள சிலரின் உதவியுடன் தேடியதில் மாடுகளை இறைச்சிக்காக வெட்டும் இடத்தில் குறித்த பசு வெட்டுவதற்கு தயாராக கட்டிப் போடப்பட்டு இருப்பதை கண்டு பிடித்த உரிமையாளர் குறித்த பசுவை மீட்டு வந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக முருங்கன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருப்பதாக பசு மாட்டின் உரிமையாளர் தெரிவித்தார்.