ஜெ.ஈழமகன் -முல்லைத்தீவு
முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் கல்வி வலையத்திற்குற்பட்ட மாங்குளம் மகாவித்தியாலய மாணவர்கள் இன்று காலை ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்
கடந்த 2 அரை வருடங்களாக குறித்த பாடசாலைக்கு நிரந்தர அதிபர் இல்லாத நிலையில் நிரந்தர முதல்வரை நியமிக்க கோரியே குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றிருந்தது
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்
“உடன் தீர்வு இல்லையெனில் போராட்டம் வலுப்பெறும் ”
“எங்கே எங்கே எமது பாடசாலை அதிபர் எங்கே”
“தரமுயர்ந்த பாடசாலை தரமான அதிபர் வேண்டும்”
“துணுக்காய் கல்வி வலயம் அதிபர் இல்லாத 1AB பாடசாலையா ”
“அருகில் வலயம் அனாதையாக பாடசாலை ”
போன்ற சுலோகங்கங்களை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்
இதேவேளை சம்பவ இடத்திற்கு வருகை தந்த மாங்குளம் போலீசார் , மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை இடம்பெற ஒத்துழைக்குமாறும் இதற்கான தீர்வு ஒன்றை தாம் பெற்றுக்கொள்ள ஆவணசெய்வதாகவும் வழங்கிய உறுதி மொழியினை அடுத்து மாணவர்கள் கலைந்து சென்று கற்றல் நடவடிக்கையினை தொடர்ந்தனர்
குறித்த ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள், பழைய மாணவர்கள்,பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்