வி.தேவராஜ்
மூத்த ஊடகவியலாளர்
- சுயநல அரசியலால் சீரழியும் தமிழர் அரசியல்
- ‘தமிழ் மக்கள் கண்ணீரில் பொங்கிக் கொண்டிருக்க தமிழ்த் தலைமைத்துவங்கள் சுய நலத்தில் பொங்கிக் கொண்டிருக்கின்றனர்
- நாற்காலிகளுக்காக தமிழ்த் தேசியக் கோஷம்
14.01. 2011 அன்று ஒரு அன்பர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஏன் தமிழ்த் தலைமைகள் விலை போகின்றன.இன்றைய இந்த நெருக்கடி நிலையிலாவது இன உணi;வுடன் தமிழினத்தின் விடிவுக்காக விமோசனத்திற்காகப் பணியாற்றக் கூடாதா என்று தொலைபேசியில் வினவினார்.கடந்த 12 வருடங்களுக்கு முன் அந்த அன்பர் எழுப்பிய கேள்வி அவரது உள்ளக் கிடக்கையாக மாத்திரமன்றி தமிழ் மக்களின் ஏகோபித்த உணர்வலையாகவும் உள்ளது என்று அவ் வேளையில் கேசரியில் எனது பத்தியில் எழுதினேன். அந்த அன்பரின் கேள்வி இன்று எழுப்பப்பட்டாலும் பொருந்தும்.
15.01.2011 இல் வீரகேசரியில் எழுதிய எனது பத்தி அவ் வேளையில் இவ்வாறு கூறியது.
‘தமிழ் மக்கள் கண்ணீரில் பொங்கிக் கொண்டிருக்கின்றனர்.தமிழ்த் தலைமைத்துவங்கள் சுய நலத்தில் பொங்கிக் கொண்டிருக்கின்றனர்.இது தமிழ் மக்களின் தலைவிதியாகப் போய்விட்டது போலும். வுhக்களித்த மக்களை மறப்பதும் மக்களின் நலன்களைத் தூக்கி வீசிவிட்டு தமது சுய நலன்களுக்குள் புதைந்து போவது என்பது தமிழ் அரசியல் தலைமைத்துவங்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் கை வந்த கலை.. இன்று தமிழ் மக்கள் அனுபவிக்கின்ற பெரும்பாலான இன்னல்கள் தமிழ்த் தலைமைத்துவங்களாலும் உருவாக்கப்பட்டவை என்பது வெளிச்சத்துக்கு வராத உண்மை.’
2023 ஜனவரியில் அதாவது 12 வருடத்திற்குப் பிறகும் மீட்டுப் பார்க்கும்போது அது இன்றைய சூழ்நிலைக்கும் பொருந்துவதாகவே உள்ளது. அப்படியானால் தமிழ்த் தலைமைகள் தம்மை மாற்றிக் கொண்டதாக இல்லை என்பதே உண்மையாகும்.
- சுயநல அரசியல்
மொத்தத்தில் தமிழ்த் தலைமைத்துவங்களின் உள்ளக சுயநல அரசியல் ஒட்டு மொத்த தமிழ் இனத்தையும் துவம்சம் செய்து கொண்டிருக்கின்றது.வடக்கு கிழக்காகட்டும் மலையகமாகட்டும் ஒட்டு மொத்த தமிழினத்தின் தலைவிதியைத் தீர்மானிக்கப் புறப்பட்ட இந்த அரசியல் தலைமைகளின் உள்ளக சுய நல அரசியல் சீரழித்துக் கொண்டிருக்கின்றது.
தமிழ் பேசும் மக்களின் அபிலாiஷகளை முன் நகர்த்தும் நிலையில் இன்றைய தமிழ்த் தலைமைகள் இல்லை என்ற கசப்பான உண்மையை ஏற்றுக் கொண்டாக வேண்டும்.
- “நாற்காலிகளுக்காக கோஷம்” எழுப்புவர்களாகவே தமிழ்த் தலைமைகள்!
அரசாங்கத்துடன் இணைந்தால்தான் சமூகத்திற்காக எதையும் செய்ய முடியும் என்று கூறுபவர்களும் மக்கள் ஒற்றுமைப்பட்டாலே தமிழ்த் தேசியத்தை நிலை நிறுத்த முடியும் உலகத்திற்கு தமது ஒன்றுபட்ட சக்தியை காட்ட முடியும் எனக் கோரி வாக்கு வேட்டையாடுபவாகள்; மறுபுறம் என ஒட்டு மொத்த தமிழ்த் தலைமைகளும் இறுதியில் எல்லோருமே ‘நாற்காலிகளுக்காக கோஷம்‘ எழுப்புவர்களாகவே உள்ளனர்..
இவர்கள் நாடாளுமன்றம் சென்று என்ன செய்தனர் மாகாண சபை பிரதேச சபைகளில் வெற்றி ஈட்டி என்ன செய்தனர் என்பதைக் கூட்டிக் கழித்துப் பார்த்தால் எல்லாம் பூஜ்ஜியமாகவே இருக்கும். ஆனால் தமிழ்த் தலைமைகள் அவர்களது ஆதரவாளர்கள் அனைவரும் சுகபோகம் அனுபவிக்கவே தேசியம் தேசியத்திற்கு எதிரான கோஷம் என்பன பயன்படுகின்றனவே ஒழிய தமிழ் மக்களின் விடுதலை நோக்கி அல்ல என்பது உண்மை.
- Serious Business
மொத்தத்தில் தமிழ்த் தலைமைகளுக்கும் அவர்கள் சார்ந்தோருக்கும் அரசியல் என்பது Serious Business என்பதுதான். இந்த Business இல்லாத தலைமைகளும் உள்ளன.
- தமிழ்த் தேசியம் தகர்ந்து போவதில்லை
இன்றைய தமிழ்த் தலைமைகளின் இந்த போக்கு காரணமாக தமிழ்த் தேசியம் தகர்ந்து விட்டதாக அர்த்தமல்ல. அது இன்னொரு வடிவத்திற்கு தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருக்கின்றது என்பதை தமிழ்த் தலைமைகள் புரிந்து கொண்டால் சரி.
ஏனெனில் தமிழ்த் தேசியமும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாiஷகளும் தகர்ந்து போவதில்லை. அவை நீறு பூத்த நெருப்பாக தமிழ் மக்களின் மனதில் கனன்று கொண்டிருக்கின்றன என்பதை சுதந்திர இலங்கையின் கடந்த 75 வருடகால வரலாறு உணர்த்துகின்றது.
இன்றைய நிலையில் ‘சிஸ்டம் சேஜ்‘; என தென்னிலங்கை கோரி நிற்பது போன்று தமிழ்த் தலைமைகளை வீட்டுக்குப் போகுமாறு கோரும் நிலை உருவாகினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இவ்வாறு எழுதுவதனால் இன்னொரு தீவிரவாதத்தைத் தூண்டுவதாக தமிழ்த் தலைமைகள் சில போர்க் கொடி தூக்கி பிரசாரப்படுத்த முயலலாம். வடக்குக் கிழக்கில் தற்பொழுதே தமிழ்த் தலைமைகளுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. மன்னாரில் ஒரு பிரதேச சபையில் மக்களே முன் வந்து வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளனர். இத்தகைய சம்பவங்கள் தமிழ்த் தலைமைகளின் மீதான நம்பிக்கையின்மையின் வெளிப்பாட்டின் வடிவங்களாகும்.
- தென்னிலங்கையில் 103 வயது முதியவரின் எதிர்பார்ப்பு
தென்னிலங்கையில் மாற்றம் தேவையென இளைஞர் யுவதிகள்தான் வீதியில் இறங்கி போராடுகின்றனர் என்று கூறுவதற்கில்லை. ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில் 103 வயது நிரம்பிய பெரியவர் – வுhந றசவைநசஇ னு. டு. ளுசைiஅயnநெ கசழஅ முழாரறயடய ளை 103 லநயசள ழடன – இவ்வாறு எழுதுகின்றார்.
- சிங்கள தலைவர்களால் நாடு நாசமானது.
பிரித்தானியாவிடம் இருந்து இலங்கை சுதந்திரம் பெற்று ஏறக்குறைய 75 வருடங்கள் ஆகிறது. துரதிஷ்டவசமாக அதிகாரத்திற்காக போராடும் பேராசை கொண்ட தேசப்பற்றற்ற சிங்கள தலைவர்களால் நாடு தவறாக ஆட்சி செய்யப்பட்டு நாசமானது.
அது இப்போது திவாலான தேசமாக உள்ளது. 80சதவீத மக்கள் உணவு எரிபொருள் மற்றும் மருந்து இல்லாமல் பட்டினியில் உள்ளனர். 75 ஆண்டுகால தவறான ஆட்சியை சுதந்திரத்தின் 75 வருடங்களாக கொண்டாட திட்டமிடுவது அவமானம்.
2023 பெப்ரவரி 4 ஆம் திகதி இலங்கையை வளமான மற்றும் மகிழ்ச்சியான நாடாக மாற்ற கடவுள் அல்லாஹ் மற்றும் அனைத்து தெய்வங்களுகளையும் நோக்கிய மனந்திரும்பும் மத பிரார்த்தனைகளில் ஈடுபடும் நாளாக இருக்க வேண்டும்.
மிக விரைவில் எதிர்காலத்தில் அதன் பல்லின பல கலாசார பல மொழிகளுடன் அனைத்து குடிமக்களும் சுதந்திரத்துடனும் சமத்துவத்துடனும் வாழும் நாளாக உதயமாக வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
எனவே தென்னிலங்கையின் சிந்தனைப் பரம்பல் 103 வயது பெரியவர்வரை ஆழப் பரவி வேரோடிப் போய் உள்ளது.
அதாவது ‘மாற்றம்‘ குறித்த சிந்தனை அரச பயங்கரவாத அடக்குமுறைகளையும் மீறி தென்னிலங்கையில் ஆழ வேரூன்றிக் கொண்டிருக்கின்றது.
ஆனால் ஒற்றுமைப்பட வேண்டிய தமிழ்த் தலைமைகள் ‘நாற்காலி அரசியலுக்காக‘ தமிழ் மக்களின் கருத்துக்களுக்கு மாறாக ‘நவக்கிரகங்களாக‘ திசைமாறி நிறகின்றனர்.
- தமிழ்ச் சிவில் சமூகம்
இவ்வேளையில் பேச்சுவார்த்தையில் இலங்கையில் உள்ள தமிழ்த் தரப்புகளின் பொறுப்புப் பற்றிய தமிழ்ச் சிவில் சமூகத்தவர்களின் கரிசனைகள் அடங்கிய மகஜர் வெளிவந்துள்ளது. 27 சிவில் அமைப்புக்களும் 551 சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் கூட்டாக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளனர்.
தமிழர் தரப்பில் பொது வெளியில் முன் வைக்கப்பட்டுள்ள தமிழ்த் தரப்புக்களுக்கான பொறுப்புக்களை கையேற்பது யார்
என்ற கேள்வி எழும்புகின்றது. இன்றைய நிலையில் எவராவது பொறுப்பெடுக்க முன்வந்தால்கூட அது தேர்தல்கால வாக்குறுதியாகவே அமையும்.
அதேவேளையில் தமிழ்ச் சிவில் சமூகத்தவர்களின் செயற்பாடு இத்துடன் நின்றுவிடக் கூடாது. தமிழ்ச் சமூகத்தில் வெற்றிடமாகி உள்ள தலைமைத்துவத்தை வடிவமைப்பதற்கான வேலைத் திட்டத்தை முன் நகர்த்த வேண்டிய வரலாற்றுக் கடமை தமிழ்ச் சிவில் சமூகத்தவர்களின் கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.