ஐக்கிய அமெரிக்காவை தளமாகக் கொண்டியங்கும் அனைத்துலக மருத்துவ நல அமைப்பு (IMHO-USA) மற்றும் ஐக்கிய இராட்சியத்தை தளமாகக் கொண்ட இரட்ணம் பவுண்டேசன் நிறுவனம்(Ratnam Foundation-UK)என்பன இணைந்து அமுல்படுத்தும் முன்பருவ பிள்ளை அபிவிருத்தி திட்டத்தில் மேற்படி இரு வைபவங்களும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய ஆரம்ப முன்பிள்ளை பருவ அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் 18.01.2023 அன்று நடந்தேறின.
பொங்கல் விழா டாக்டர் சாம் முன் பள்ளி வளாகத்தில் முன்பள்ளி ஆசிரியர்களின் கலை நிகழ்வுகளுடன் சிறப்பாக கொண்டாட ப்பட்டது. இவ்விழாவில் வரவேற்பு நடனம் , கோலாட்டம்,கும்மி,காவடியாட்டம்,கரகாட்டம் இடம்பெற்றிருந்ததுடன் இணந்து கொண்ட அனைத்து முன்பிள்ளை ஆசிரியர்கள்,பெற்றோர்கள்,சிறார்கள் மற்றும் வலய உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் பொங்கலுடன் பிரசாதங்களும் ஏற்பாட்டாளர்களினால் வழங்கப்பட்டது.
அன்றைய தினம் கிளிநொச்சி வடக்கு வலயக் கல்வி பணிப்பாளர் திரு.க.அ.சிவனருள்ராஜா அவர்களின் சிந்தனையில் உருவாகி அவரால் மேற்படி இரு அமைப்புக்களான விடுக்கப்பட்ட கோரிக்கைக்கமைவாக இக் கல்வி வலயம் முன்பள்ளிகளின் மாதிரிக் கல்வி வலயமாக அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. இதனை வட மாகாண கல்வி பணிப்பாளர் திரு.திருஞானம் ஜோன்குயின்ரஸ் அவர்கள் இப்பொங்கல் விழாவில் அதற்கான பெயர்பலகையை திரைநீக்கம் செய்து உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.இந் நிகழ்வின் போது முன்பள்ளி ஆசிரியர்களுக்கு நடாத்தப்பட்ட செயற்படு சார் திறன் விருத்தி செயலமர்வுகளில் பங்கு பற்றி தம் திறமைகளை வெளிப்படுத்தியவர்களுக்கான சான்றுகளும் இவரால் வழங்கப்பட்டமை ஆசிரியர்களுக்கான ஊக்குவிப்பாக அமைந்திருந்தது.
இவ்விரு விழாக்களிலும் அனைத்துலக மருத்துவ நல அமைப்பின்(IMHO-USA) இலங்கைக்கான வதிவிட பணிப்பாளர் திரு..சு.கிருஷ்ணகுமார் அவர்கள் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டு இவ்விழாவை சிறப்பித்திருந்தார்கள்.
வலய கல்வி பணிப்பாளரின் கோரிக்கைக்கமைவாக ஆசிரியர்களுக்கான திறன் விருத்தி பயிற்சிகள் மட்டுமன்றி அவர்களில் திறமையாக செயற்பட்டவர்களுக்கான மேலதிக பயிற்சிகள்,அவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சிகள்,தன்னிலை மேம்பாட்டு பயிற்சிகள்,நிர்வாக விடயங்களை கையாள்வதற்கான பயிற்சிகள், இவர்களைக் கொண்டு முன் பள்ளிகளின் முன்னேற்ற அறிக்கை பெறுவதற்கான செயற்பாடுகள்,கொத்தணி ரீதியாக மாதிரி முன்பள்ளிகளின் அபிவிருத்தி,இப்பள்ளிகளில் பாடசாலைத்தோட்டம்,இதன் தொடர்ச்சியாக போசாக்கு உணவிற்கான சிறு பங்களிப்பு,பள்ளி சிறார்களுக்காக வலயத்தில் மாதிரி நூலகம் ஒன்று,பெற்றவர்களுக்கான விழிப்புணர்வுகள், முகாமைத்துவ குழுக்களை வலுப்படுத்தும் பயிற்சி,விசேட தேவையுடைய சிறார்களை முன்கூட்டியே இனங்கண்டு உதவியளிக்கும் செயற்பாடுகள்,சிறுவர் அரங்கு செயற்பாடுகள் மற்றும் மாதிரி முன்பள்ளிகளில் மாதாந்தம் பௌர்ணமி தின கலைநிகழ்வுகளுக்கான பங்களிப்பு போன்ற வற்றை இவ்வருட இறுதி வரையான காலப்பகுதிக்குள் வழங்கும் ஏற்பாடுகள் இத்திட்டத்தில் அடங்கியுள்ளன.