யாழ்ப்பாணம் சுருவிலை வதிவிடமாகக் கொண்டிருந்தவரும் தற்போது யாழ்ப்பாண மாவட்ட புதிய அரசாங்க அதிபராக நியமனம் பெற்றுள்ளவருமான சிவபாதசுந்தரம் அம்பலவாணர் அவர்களை சுருவில் மக்கள் ஒன்றியம் – கனடா வாழ்த்தும் வகையில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்தச் செய்தியில் பின்வருமாறு தெரிவிக்கப்பெற்றுள்ளது.
“எமது கிராமத்தை சேர்ந்த திரு சிவபாதசுந்தரம் அம்பலவாணர் அவர்கள்
யாழ் மாவட்டத்திற்கான புதிய அரச அதிபராக நியமிக்கபட்டதை அறிந்து மிக்க மகிழ்ச்சி கொள்வதோடு அவரது அரச மற்றும் பொதுப் பணிகள் மென் மேலும் சிறந்து விளங்கி தாயக மக்களுக்கு நன்மைகளைக் அளிக்கவும் அவரது சேவை தொடரவும் வாழ்த்துகிறோம்.
அத்துடன் எமது மண்ணின் மைந்தன் அவர்கள் உடல் ஆரோக்கியத்தோடு நீண்ட நாள் உயர் பதவிகளில் பிரகாசிக்கவும் சுருவில் ஐயனார் அருள் பெற்று வாழவும் வேண்டுகின்றோம்.
இங்ஙனம்-
சுருவில் மக்கள் ஒன்றியம், கனடா
இவ்வாறு அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது