கடந்த சனிக்கிழமையன்று ஸ்காபுறோ சீனக் கலாச்சார மண்டபத்தில் Centre for Youth
Empowerment and Community Services ஏற்பாட்டில் நடைபெற்ற நீயா நானா? புகழ் கோபிநாத் அவர்கள் கலந்து கொண்ட சிறப்பு நிகழ்விற்காக ஊடக ஆதரவை வழங்கிய Time FM வானொலி நிறுவனத்திற்கு நன்றி தெரிவிக்கும் பாராட்டுப் பத்திரம் நேற்று வழங்கப்பெற்றது.
கோபிநாத் அவர்களின் கையெழுத்திட்ட இந்த பாராட்டுப் பத்திரத்தை Centre for Youth Empowerment and Community Services அமைப்பின் நிதி;ப் பொறுப்பாளர் ராம் சங்கர் சிவநாதன் அவர்கள் வானொலி நிலையத்தின் சிரேஸ்ட ஒலிபரப்பாளர் ஒருவரிடம் வழங்குவதை இங்குள்ள படத்தில் காணலாம்.