இன்று காலை தொடக்கம் மொன்றியால் மாநகரில் ‘லவால்’ பிரதேசத்தில் ஒரு அழகிய மண்டபத்தில் கொண்டாடப்பெற்ற ‘தமிழ் மரபுத் திங்கள்’ கொண்டாட்டத்தின் போது கனடிய வெளிவிவகார அமைச்சர் மெலனி அவர்கள், எமது கனடிய பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி மற்றும் நீயா நானா புகழ் கோபிநாத் அவர்கள் ஆகியோரோடு உரையாடிய பின்னர் எடுத்துக் ◌கொண்ட புகைப்படங்கள் இங்கே காணப்படுகின்றன.
இன்றைய நிகழ்வில் சுமார் 2500 பார்வையாளர்களும் பிரமுகர்களும் கலந்து கொண்டார்கள் என்பதும் எமது தமிழ்ப் பண்பாட்டையையும் கலையின் மேன்மையினையும் வெளிக்காட்டும் படைப்புக்கள் மேடையேற்றப்பெற்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
அத்துடன் மொன்றியால் மாநகரில் இயங்கிவரும் 30க்கும் மேற்பட்ட தமிழ் அமைப்புக்கள் ஒன்றாகக் கூடீ இந்த தமிழ் மரபுத் திங்கள் பெருவிழாவை நடத்திினார்கள் என்பது இங்கு எடுத்துச் சொல்ல வேண்டிய ஒரு முக்கிய குறிப்பாகும்.
அங்கு இறுதி நிகழ்வாக இடம்பெற்ற கோபிநாத் அவர்களின் நெறியாழ்கையில் இடம்பெற்ற விவாத நிகழ்ச்சி மக்களின் பாராட்டைப் பெற்றது என்பதும் அந்த நிகழ்வு வரை எமது ரொறன்ரோ குழுவினர் காத்திருக்கக் கூடிய சந்தர்ப்பம் அமையவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வானது தமிழ் மொழிக்கும் தமிழ் பண்பாட்டி ன் மேன்மைக்கும் முத்தமிழின் அழகுக்கும் எடுக்கப்பெற்ற பெருவிழா என்றால்அ அத மிகையாகாது.
ரொறன்ரோவிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி ஒன்றாரியோ மாகாண சபை உறுப்பினர் லோகன் கணபதி மற்றும் கல்விச் சபை உறுப்பினர் நீதன் சாண் ஆகியோர் உத்தியோகபூர்வமாக கலந்து கொண்டார்கள் என்பதும் கவனிக்கத் தக்கதும் பெருமைப் பட வேண்டியதுமான ஒரு விடயமாகும்
செய்தியும் படங்களும்:- சத்தியன்