கடந்த வாரம் கனடிய பாராளுமன்றத்தில் இலங்கை அரசின் தமிழினப் படுகொலையாளிகளான மகிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபாய ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக கனடிய அரசின் தடைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றிய கனடாவின் வெளிவிவகார அமைச்சர் Mélanie Joly
கடந்த வாரம் கனடிய பாராளுமன்றத்தில் இலங்கை அரசின் தமிழினப் படுகொலையாளிகளான மகிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபாய ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக கனடிய அரசின் தடைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றிய கனடாவின் வெளிவிவகார அமைச்சர் Mélanie Joly அவர்களை ஸ்காபுறோவிலுள்ள இரண்டு தமிழர் வர்த்தக நிலையங்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி நேற்று முன்தினம் புதன்கிழமை மதியம் அழைத்து வந்தார்.
அப்போது கனடிய அரசின்
Minister of Foreign Affairs Mélanie Joly அவர்களது அமைச்சில் பணியாற்றும் முக்கியமான ஆலோசகர்களும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
கனடாவின் வெளிவிவகார அமைச்சர் Mélanie Jolyஅவர்கள் விஜயம் செய்த இரண்டு வர்த்தக நிலையங்களும் மோர்னிங்சைட்- செப்பேர்ட் சந்திக்கு அருகில் அமைந்துள்ள Rouge Bakery மற்றும் Urban Silks ஆகியவைகள் ஆகும்.
மேற்படி அமைச்சரின் விஜயத்தின் போது உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியரும் அங்கு அழைக்கப்பட்டிருந்தார்.
அமைச்சர் மேற்படி வர்த்தக நிலையங்களுக்கு விஜயம் செய்தபோது Urban Silks நிறுவனத்தின் உரிமையாளர் திரு மனோகரன் பொன்னுச்சாமி மற்றும் அவரது பாரியார் Rouge Bakery நிறுவனத்தின் உரிமையாளர் திரு நீதிராஜா நாகரட்ணசிங்கம் ஆகியோர் முறையே மாலைகள் அணிவித்து அமைச்சரையும் பாராளுமன்ற உறுப்பினரையுயும் வரவேற்றனர்.
அப்போது அங்கு கூடியிருந்த தமிழ் அன்பர்கள் சிலர் அமைச்சர் அவர்கள் இலங்கை அரசின் தமிழினப் படுகொலையாளிகளான மகிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபாய ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக கனடிய அரசின் தடைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றி அந்த நடவடிக்கைகளை உறுதிப் படுத்தும் வகையில் தொடர்ந்தும் சந்திப்புக்களிலும் உரையாடல்களிலும் ஈடுபட்டு வரும் பணிக்காக நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டனர்