அமரர் பத்மநாதன் மகேஸ்வரி அறக்கட்டளையின் அனுசரணையுடன் அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகத்திற்குட்பட்ட சிறி கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயத்தின் சாதனையாளர் கௌரவிப்பு விழா, பாடசாலை அதிபர் இளங்கோவன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இதன் போது பிரதம அதிதியாக சம்மாந்துறை வலயக்கல்வி பணிப்பாளர் அமீர் அவர்களும், பிரதிக் கல்விப் பணிப்பாளர் சகாதேவராஜா அவர்களும், உதவிக் கல்விப் பணிப்பாளர் பரமதயாளன் அவர்களும், கௌரவ அதிதிகளாக அமரர் பத்மநாதன் மகேஸ்வரி அறக்கட்டளையின் இணைப்பாளர் கேசவகுமார் அவர்களும், லண்டன் எல்பீட் நாகபூசணி அம்மன் ஆலயத்தின் முன்னாள் தலைவரும் நீம் நிறுவனத்தின் நிறுவுனருமான மன்மதன் மற்றும் ரதி அவர்களும் , நீம் நிறுவனத்தின் பணிப்பாளர் நிதர்ஷன் அவர்களும் கலந்து கொண்டனர்.
இதன் போது தரம் -5, க.பொ.த (சா/தர) பரீட்சை மற்றும் க.பொ.த (உ/தர) பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பதக்கங்கள் மற்றும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இதன் போது பாடசாலையில் பிரதான பெயர்ப் பலகையும் திறந்து வைக்கப்பட்டது விசேட அம்சமாகும்.