டி20 போட்டிகளில் அரிதான நிகழ்வாக சிட்னி சிக்சர்ஸ் அணி ஒரே பந்தில் 16 ரன்களை எடுத்து சர்வதேச கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது. இந்த ரன்கள் எடுப்பதற்கு சிட்னி சிக்சர்ஸ் அணியின் பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் உறுதுணையாக இருந்தார். இந்த போட்டியில் சிக்சர்ஸ் அணி 24 ரன்களில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரைப் போன்று ஆஸ்திரேலியாவில் பிக் பேஷ் லீக் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. நேற்று நடைபெற்ற போட்டியில் சிட்னி சிக்சர்ஸ் அணியும் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணியும் மோதின.
சிட்னி அணி முதலில் பேட் செய்தபோது, தொடக்க வீரர்களாக ஸ்டீவ் ஸ்மித் – பிலிப் ஆகியோர் களத்தில் இறங்கினர். இந்த போட்டியின் 2 ஆவது ஓவரை ஹரிகேன்ஸ் அணியின் ஜோயல் பாரிஸ் வீசினார். 3 ஆவது பந்தை அவர் வீசியபோது அதை ஸ்மீத் சிக்சருக்கு பறக்க விட்டார். இந்த பந்து நோபாலாக வீசப்பட்டதால் மொத்தம் 7 ரன்கள் கொடுக்கப்பட்டன. இதனால் 6 ரன்னில் இருந்த அணியின் ஸ்கோர் 13 ஆக உயர்ந்தது. நோபாலுக்கு ஃப்ரீ ஹிட்டாக 3ஆவது பந்து வீசப்பட்டது. இதனை ஸ்மித்துக்கு லெக் சைடில் வைடாக பாரில் வீசினார். இந்தப் பந்து கீப்பரின் கைகளுக்குள் பிடிபடாமல் பவுண்டரிக்கு சென்றது. இந்த வகையில் மேலும் 5 ரன்கள் அளிக்கப்பட்டன. அதனால் அணியின் ஸ்கோர் 18 ஆக உயர்ந்தது. மீண்டும் 3ஆவது பந்தை பாரிஸ் வீச அந்த பந்தை பவுண்டரிக்கு ஸ்மித் விரட்டினார். இதையடுத்து ஸ்கோர் 22 ஆக உயர்ந்தது.
15 runs off one legal delivery! 😵💫
Steve Smith’s cashing in once again in Hobart 🙌#BucketBall #BBL12 pic.twitter.com/G3YiCbTjX7
— KFC Big Bash League (@BBL) January 23, 2023
1.2 ஓவரில் 6 ரன்னாக இருந்த சிட்னி சிக்சர்ஸ் அணியின் ஸ்கோர் 1.3 ஓவரில் 22 ஆக உயர்ந்தது. இதுதொடர்பான வீடியோ ஒன்று கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறது. முதலில் பேட் செய்த சிட்னி சிக்சர்ஸ் அணி 180 ரன்கள் குவித்தது. ஸ்மித் 33 பந்துகளில் 66 ரன்கள் எடுத்தார். அடுத்து பேட் செய்த ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி 154 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.