(28-01-2023)
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு – கோட்டை நீதவான் நீதிமன்றில் நேற்று வெள்ளிக்கிழமை முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
காலி முகத்திடல் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில் குறித்த வழக்கில் அவரை 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீர பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.