(27-01-2023)
மன்னார்-கீரி பகுதியில் இறைச்சிக்காக கொண்டு சென்ற கடலாமையுடன் வெள்ளிக்கிழமை( 27ம் திகதி காலை 7.20 மணி அளவில் மன்னார் பிரதேச குற்றத்தடுப்பு பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் 2 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-கைது செய்யப்பட்டவர்கள் கீரி பகுதியைச் சேர்ந்த 50 மற்றும் 55 வயதுடையவர்கள் என மன்னார் பிரதேச குற்றத்தடுப்பு பொலிஸ் புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் உயிருடன் மீட்கப்பட்ட கடலாமை 35 கிலோ எடை கொண்டது என தெரிய வருகிறது.
மன்னார் பிரதேச குற்றத்தடுப்பு பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில்,மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமன் துல்சான் நாகாவத்தவின் பணிப்புரைக்கு அமைவாக உதவி பொலிஸ் அத்தியட்சகர் (2) அரியரட்ண பண்டார மற்றும் மன்னார் பிரதேச குற்றத்தடுப்பு பொலிஸ் புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆனந்த ரட்ணாயக்க தலைமையில்,பொலிஸ் சாஜன் 36501 ரத்நாயக்க மற்றும் உத்தியோகத்தர்கள் சென்று குறித்த கடலாமை யை உயிருடன் மீட்ட தோடு,குறித்த இரு நபர்களையும் கைது செய்துள்ளனர்.
-கைது செய்யப்பட்ட நபர்கள் மற்றும் மீட்கப்பட்ட கடலாமை மன்னார் நீதிமன்றத்தில் ஒப்படைக்க பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.