ஜெகதீஸ்வரன் பிரஷாந்த்
மாந்தை கிழக்கு பிரதேச செயலாளரின் வேண்டுகோளுக்கிணங்க றகமா நிறுவனத்தினரால் மாந்தை கிழக்கு பிதேசத்திற்குட்பட்ட நான்கு குளங்களிற்க்கு (ஒட்டறுத்தகுளம், வண்டிகட்டு குளம், பாலப்பாணி குளம், கிடாப்பிடித்த குளம்) இன்று (27.01.2023) நன்னீர் மீன் வளர்ப்பு திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது .
இத் திட்டத்தினை மந்தை கிழக்கு பிரதேச செயலாளர் மற்றும் றகமா நிறுவனத்தின் செயலாளர் நாயகம் இணைந்து ஆரம்பித்து வைத்தனார்.
இச்செயற்றிட்டத்திற்காக குறித்த குளங்கள் உள்ளடங்கிய கமக்கார அமைப்பினர் 10000 மீன் குன்சுகளும் றகமா நிறுவனத்தினரால் 50000 மீன் குன்சுகளும் குறித்த குளங்களுக்கு விடப்பட்டது.
உணவு உற்பத்தியினை அதிகரிக்கும் செயற்த்திட்டத்தின் கீழ் தேவைப்பாடுடைய 4 கிராமங்களில் 120 நன்னீர் மீன்பிடி தொழிலை மேற்கொள்ளும் குடும்பங்களிர்க்கு நிலையான வருமானத்தினை பெற்றுக்கொடுப்பதற்காகவும் பிரதேச மக்களிற்கன போசக்கான உணவினை பெற்றுக்கொடுப்பதற்காகவும் இச் செயற்த்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது