ஜெகதீஸ்வரன் பிரஷாந்த்
முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி பகுதியில் நேற்று முன்தினம்
(28-01-2023) மல்லாவி நமணன்குளம் பகுதியில் உள்ள இரு வீடுகளில் நகை மற்றும் பணங்களை களவாடிய குற்றச்சாட்டில் இரு பதின்ம வயது சிறுவர்கள் மல்லாவி பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்
திருட்டு சம்வங்கள் இடம்பெற்ற நாட்களுக்கு அண்மைய நாட்களில் அந்த பகுதிகளில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய இருவர் தொடர்பாக மாவட்ட புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து குறித்த திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்
இதேவேளை சந்தேக நபர்கள் இருவரும் மல்லாவி பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் , கைதானவர்களில் ஒருவர் கடந்த ஒருவாரத்திற்கு முன்னர் தான் நீதிமன்றினால் தண்டனை வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்தார் என்றும் போலீசார் தெரிவித்தனர்
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து களவாடப்பட்டதாக கூறப்படும் அணிகலன் மற்றும் பணங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்த மல்லாவி போலீசார் , இன்றைய தினம் மாங்குளம் நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்