ஸ்காபுறோ ஶ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் வரசித்தி விநாயகர் இந்துக் கல்லூரியினர் நடத்திய ‘தமிழர் மரபுரிமை திங்கள் கொண்டாட்டமாக ”முத்தமிழ்க் கலை விழா’ 29-01-2023 ஞாயிற்றுக்கிழமை மதியம் கல்லூரி மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
ஆரம்பத்தில் அழைக்கப்பெற்ற சிறப்பு விருந்தினர்கள் மங்கல விளக்கேற்றி வைத்து விழாவை தொடக்கினார்கள்.
கல்லூரி அதிபர் பூங்கோதை அமுதன் அதிபர் உரையாற்றினார். அவர் தனது உரையில் வரசித்தி விநாயகர் இந்துக்கல்லூரியை ஆரம்பித்து தொடர்ச்சியாக ஆசிரியைகளுக்கும் மாணவ மாணவிகளுக்கும் மிகுந்த உற்சாகத்தையும் உணர்வையும் அளித்து கொண்டிருக்கும் சிவஶ்ரீ விஜயகுமாரக் குருக்கள் அவர்களை மரியாதையோடு பாராட்டி மகிழ்ந்தார்.
தொடர்ந்து இந்துக் கல்லூரி மாணவ மாணவிகளின் கலைப் படைப்புக்கள் மேடையேற்றப்பெற்றன. நடனம் நாடகம் பட்டி மண்டபம் மற்றும் உரைகள் ஆகியன இளளைய தலைமுறையினரால் நேர்த்தியான முறையில் மேடையேற்றப்பெற்றன.
இந்த கலைப் படைப்புக்கள் சிறந்த முறையில் சபையோருக்காக நிகழ்த்தப்பெற்றமைக்கு கல்லுர்ரி ஆசிரியப் பெருந்தகைகளே காரணமாக இருந்தார்கள் என்றால் அது மிகையாகாது.
முத்தமிழ் விழாவிற்கு கனடாவின் மூன்று நிலை அரசாங்கங்கள் சார்பில் தமிழ் பேசும் உறுப்பினர்களும் தமிழர் அல்லாத மக்கள் பிரதிநிதிகளும் அழைக்கப்பெற்றிருந்தனர்.
ஸ்காபுறோ ரூஜ்பார்க் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி அவர்கள் ஒன்றாரியோ மாகாணப் பாராளுமன்றத்தின் மார்க்கம் தோர்ண்ஹில் தொகுதியின் உறுப்பினர் லோகன் கணபதி அவர்கள் மற்றும் ஸ்காபுறோ அஜின்கோர்ட் தொகுதயின் உறுப்பினர் அரிஸ் பாபிகியன் மற்றும் கல்விச்சைப உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டு தங்கள் வாழ்த்துரைகளை வழங்கினர்.
கனடா உதயன் பத்திரிகை பிரதம ஆசிரியரும்அங்கு வாழ்த்துரை வழங்கினார்.
விழா எவ்வித தொய்வுமின்றி மிகவும் சிறப்பாக நகர்ந்து கொண்டிருந்தது. இதற்கு மூல காரணமாக இருந்தவர்கள் கல்லூரி நிர்வாகத்தினர் மற்றும் ஆசிரியப் பெருந்தகைகள் மற்றும் தொண்டர்களாக பணியாற்றிய கல்லுர்ரி பழைய மாணவர்கள் ஆகியோர் என்பது குறிப்பிடத்தக்கது.
அங்கு உரையாற்றிய அனைத்து பேச்சாளர்களும் சிவஶ்ரீ பஞசாட்சர விஜயகுமாரக் குருக்கள் அவர்களின் ஓயாத உழைப்பும் அயராக முயற்சியும் தான் என்பதை குறிப்பிடத்தவறவில்லை.-
செய்தியும் படங்களும்;- சத்தியன்