இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையே 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று நடைபெற்றது. டி20 தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணியும், 2ஆவது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றன. எனவே, தொடரை வெல்லப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் கடைசிப் போட்டியானது அகமதாபாத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் அபாரமான ஆட்டத்தை வெளியிப்படுத்தி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 234 ரன்களை குவித்தனர்.
235 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களத்தில் இறங்கிய நியூசிலாந்து அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியில் நியூசிலாந்து அணி 12.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 66 ரன்கள் மட்டுமே எடுத்து 168 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.இதன் மூலம் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது.
இந்த போட்டியில் இந்திய அணியின் தொடக்க பேட்ஸ்மேன் சுப்மன் கில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதமடித்தார். இதன் மூலம் 20 ஓவர் போட்டிகளில் சதம் அடித்த 5 ஆவது இந்திய வீரர் என்ற சாதனையை ஏற்படுத்தினார்.நேற்றைய போட்டியில் கில் 7 சிக்சர், 12 பவுண்டரிகள் விளாசி மொத்தம் 126 ரன்களை குவித்தார். இதன் மூலம் டி20 போட்டியில் ஒரு இந்திய வீரர் எடுத்த அதிக ஸ்கோர் என்ற சாதனையை கில் பெற்றுள்ளார். இதற்கு முன்னர் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக விராட் கோலி 122 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது.
👑🏏 GILL AT HIS BEST! Shubman Gill becomes only the second Indian to have an ODI double century & a T20I century.
💙 It is well & truly the Shubman Gill era!
📷 BCCI • #ShubmanGill #INDvNZ #NZvIND #TeamIndia #BharatArmy pic.twitter.com/1OMI4PHuJD
— The Bharat Army (@thebharatarmy) February 1, 2023
மேலும், அன்மையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இரட்டை சதம் அடித்த கில், தற்போது டி20இலும் சதம் அடித்து சூப்பரான பார்மில் உள்ளார். நேற்றைய போட்டியில் கில்லின் ஆட்டத்திற்கு முன்னாள் வீரர்கள் தொடங்கி பலரும் இணையத்தில் பாராட்டு பதிவுகளை வெளியிட்டுள்ளனர். தினேஷ் கார்த்திக், இர்பான் பதான், ஹர்ஷா போக்லே உள்ளிட்ட பலரும் ட்விட்டரில் சுப்மன் கில்லை வெகுவாக பாராட்டியுள்ளனர்.
கில் சிறப்பான பார்மில் உள்ளார். சர்வதேச ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் மற்றும் சர்வதேச டி.20 போட்டியில் சதமடித்த இரண்டாவது இந்திய வீரர் கில் தான். இதுவரை ரோஹித் சர்மா மட்டும் தான் இந்த சாதனைக்கு சொந்தக்காரராக இருந்தார். இப்போது இளம் வீரரான கில் இந்த சாதனையை படைத்துள்ளாதல் ‘இனி இது சுப்மன் கில்லின் காலமாகும்’. இவ்வாறு எல்லாம் ட்விட்டரில் பாராட்டு பதிவுகள் பகிரப்படுகிறது. பலரும் விராட் கோலியுடன் ஒப்பிட்டு கில்லை புகழ்ந்து வருகின்றனர்.