ஒரு மனிதனை யார் கைவிட்டாலும் ஆன்மீகம் கைவிடாது! என்ற உறுதியோடு உங்கள்
“ராஜயோகம்”
Dr. K. RAM.Ph.D (USA)
தொடர்புக்கு: 0091-98401 60068, 99404 31377
மேஷம் :
சோம்பல் அதிகரிக்கும் வாரம். நண்பர்கள் சந்திப்பு நன்மை பயக்கும். கருத்து வேறுபாடுகள் விலகும். சகோதார வழியில் சகாயம் கிடைக்கும். விரயம் குறையும். வியாபாரம் சிறக்கும். மனைவி பிள்ளைகளிடம் மதிப்பு உயரும். திடீர் பயணம் ஏற்படும். தொழில் வளர்ச்சி கூடும். ஆடம்பர செலவுகள் அதிகரிக்கும். பயணத்தில் கவனம் தேவை. வயிறு உபாதைகள் வந்து போகும். களவு போன பொருள் திரும்ப கிடைக்கும். வார்த்தைகளில் நிதானம் தேவை. ஆடை, அணிகலன் சேரும். சகோதர உதவி கிட்டும். பேச்சுத்திறமை அதிகரிக்கும். ஏற்றுமதி தொழில் கவனம் தேவை. பொறியியல் துறை லாபம் தரும். மாணவர்கள் திறமை பளிச்சிடும். திருமண வாய்ப்பு கூடி வரும். மன அமைதி சீராகும். உடல்நலம் திருப்தி தரும். குடும்ப ஒற்றுமை பலப்படும். வெளியூர் பயணம் உண்டு. நீண்ட நாளைய கனவு நிறைவேறும். புதிய நட்பு உருவாகும். மற்றவர் உதவி கிட்டும். மனக்குழப்பம் நீங்கும். திடீர் லாபம் உண்டு. ஞாபக மறதி ஏற்படும். உறவினர் வழியில் செலவுகள் அதிகமாகும். புதிய எண்ணங்கள் உருவாகும். கலைத்துறையில் திருப்பம் ஏற்படும். கடன் சுமை குறையும்.
வழிபட வேண்டிய தெய்வம்: துர்க்கா தேவி
அதிர்ஷ்ட எண்: 3, 5, 7, 9 அதிர்ஷ்ட நிறம்: சில்வர் கிரே அதிர்ஷ்ட எழுத்துக்கள்: T, N
ரிஷபம் :
பழைய கடன் வசூலாகும் வாரம். கலை ஆர்வம் பெருகும். உறவினர் ஒற்றுமை பலப்படும். செல்வாக்கு உயரும். கணவன், மனைவி சச்சரவு ஏற்படும். முன்கோபம் தவிர்க்கவும். பயணம் பலன் தரும். புதிய முயற்சியில் கவனம் தேவை. மாணவர்களுக்கு படிப்பில் உற்சாகம் கூடும். வர்த்தக தொழில் லாபம் தரும். பதவி உயர்வு தடைப்படும். நீண்ட நாள் பிரச்சனை முடிவுக்கு வரும். வியாபாரத்தில் கவனம் தேவை. பொருளாதார சிக்கல் நீடிக்கும். பால்ய நண்பர்களை சந்திக்க நேரிடும். வழக்கு முடிவுக்கு வரும். மருத்துவர்களுக்கு நற்பெயர் கிட்டும். புதிய சொத்து சேரும். மாற்று இன உதவி கிட்டும். பெண்களுக்கு கவனம் தேவை. மனக்குழப்பம் நீங்கும். எதிரிகள் பலம் குறையும். நல்லவர் நட்பு கிட்டும். உடல்நலத்தில் கவனம் தேவை. பணத்தட்டுப்பாடு ஏற்படும். கணவன், மனைவி சச்சரவு ஏற்படும். அரசு வாய்ப்பு தடைப்படும். செயல்திறமை பளிச்சிடும். உத்தியோகஸ்தர்கள் ஏற்றம் பெறுவார்கள். ஒரு சிலருக்கு கௌரவப் பதவிகள் தேடி வரும். நினைத்ததை சாதித்துக் காட்டுவீர்கள்.
வழிபட வேண்டிய தெய்வம்: ஸ்ரீ காளிகாம்பாள்
அதிர்ஷ்ட எண்: 4, 3, 5, 9 அதிர்ஷ்ட நிறம்: இளம் சிவப்பு அதிர்ஷ்ட எழுத்துக்கள்: L, J
மிதுனம் :
புகழும், பொருளும் சேரும் வாரம். தடைகள் விலகும். வெளியூர் பயணம் உண்டு. தந்தை உடல்நலத்தில் அக்கறை தேவை. பணவரவு சுமாராக இருக்கும். வாகனங்களில் முதலீடு உண்டாகும். குடும்ப அன்யோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். சொந்த பந்தங்களால் உதவி உண்டு. சேமிப்பு வளரும். மாணவர்களுக்கு சாதகமான காலம். முயற்சிகளில் தாமதம் ஏற்படும். ஞாபகத்திறமை அதிகரிக்கும். தனலாபம் கூடும். சுபக்காரியம் கைக்கூடி வரும். நீண்ட நாளைய நோய் விலகும். இல்லத்தில் அமைதி கூடும். சுமூகமான சூழ்நிலை பெருகும். தேக பலம் கூடும். வறுமையின் வாட்டம் குறையும். எதிர்ப்புக்கள் உருவாகி மறையும். மனதில் இனம் புரியா சந்தோஷம் ஏற்படும். பெண்களால் பெருமை சேரும். அவமானங்கள் அகலும். புத்திரர் வகையில் சந்தோஷம் கூடும். நல்ல செய்திகள் நாடி வரும். எதிர்பார்த்த விஷயம் தாமதமாகும். மனமகிழ்ச்சி கூடும். வளமான சிந்தனை உதயமாகும். அலைச்சல் ஆதாயம் தரும். புதிய முயற்சியில் கவனம் தேவை. உணவுத்தொழில் உயர்வு பெறும். செயல் விவேகம் கூடும். முற்போக்கு சிந்தனை ஏற்படும்.
வழிபட வேண்டிய தெய்வம்: பார்த்தசாரதி பெருமாள்
அதிர்ஷ்ட எண்: 9, 4, 3, 1 அதிர்ஷ்ட நிறம்: கருப்பு அதிர்ஷ்ட எழுத்துக்கள்: S, D
கடகம் :
இனிய தகவல் வந்து சேரும் வாரம். ஆக்கம் அதிகரிக்கும். தெளிவான முடிவுகள் உதயமாகும். காரியம் கைகூடும். செல்வச்செழிப்பு உயரும். விவேகம் கைக்கொடுக்கும். வெற்றி வீடு தேடி வரும். பிரபல்யங்களை சந்திக்க நேரிடும். மின்சாரத்தில் கவனம் தேவை. குதூகலமான எண்ணம் உருவாகும். குடும்ப கௌரவம் உயரும். வரவு திருப்தி தரும். பெண்களுக்கு பெருமை சேரும். வசந்தம் வாயில் தேடி வரும். மனைவியால் மரியாதை உயரும். முன்னேற்றமான தருணம் அமையும். கால்நடைகளால் லாபம் உண்டு. கவலைகள் விலகும். கண் நோய் வந்து போகும். கடன் வாங்க நேரிடும். கலைத்தொழில் திருப்தி தரும். பதவி உயர்வு கிட்டும். ஆடம்பர எண்ணம் அலைமோதும். அணிகலன் சேர்க்கை உண்டு. முயற்சிகள் வெற்றி தரும். சேமிக்கும் எண்ணம் ஏற்படும். பெற்றோர் வழியில் பிரியம் கூடும். பிரியமானவர்களால் செலவு அதிகரிக்கும். திறமைகள் வெளிப்படும். அடுத்தவர் தலையீட்டை தவிர்க்கவும். மன நிம்மதி அதிகரிக்கும். பங்குச்சந்தையில் கவனம் தேவை. குடும்ப அன்யோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை. மாற்று இனத்தவரால் நன்மை உண்டு. அயல்நாட்டுப் பயணம் உண்டு. உறவுகளால் செலவு அதிகரிக்கக்கூடும்.
வழிபட வேண்டிய தெய்வம்: எட்டுக்கை அம்மன்
அதிர்ஷ்ட எண்: 9, 7, 4, 3 அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு அதிர்ஷ்ட எழுத்துக்கள்: P, T
சிம்மம் :
பிரார்த்தனைகள் பலன் கொடுக்கும் வாரம். செயல்பாட்டில் தீவிரம் கூடும். பணவரவு திருப்தி தரும். உடன்பிறப்புக்களால் உதவி கிட்டும். மதிப்பும், மரியாதையும் உயரும். பெரியோர்களின் வாழ்த்துக் கிட்டும். குடும்பத்தினரிடம் அனுசரிப்பு கிட்டும். இடமாற்றம் நன்மை தரும். புதுமையை விரும்புவீர்கள். அரசு துறையில் ஆதாயம் கிட்டும். வாழ்த்துச் செய்தி உண்டு. மறைமுக எதிர்ப்புக்கள் வலுக்கும். உறவினர் வருகையுண்டு. அலைச்சல் அதிகரிக்கும். வாகன மாற்றம் உண்டு. செல்வாக்கு மேம்படும். பங்குச்சந்தையில் பணம் புரளும். விளையாட்டுத் துறையில் வெகுமதி கூடும். காதலர்கள் தம்பதியாவார்கள். மாணவர்கள் கல்வியில் சிறப்பார்கள். தர்ம சிந்தனை மேலோங்கும். சகோதர வகையில் கவனம் தேவை. நண்பர்களால் பாராட்டு கிடைக்கும். மங்களச்செய்தி வரும். உழைப்பில் கவனம் தேவை. வீண் செலவுகள் அதிகரிக்கும். நாவடக்கம் தேவை. பழைய பகை தீரும். பொதுப்பணிகளில் ஆர்வம் கூடும். பித்ருக்கள் சாபம் நீங்கும். சேமிப்பு அதிகரிக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். மனைவியின் அன்பு அதிகரிக்கும். இடமாற்றம் ஏற்படும். ஆபரணச் சேர்க்கையுண்டு. முயற்சி பலன் தரும்.
வழிபட வேண்டிய தெய்வம்: மஹா கணபதி
அதிர்ஷ்ட எண்: 5, 3, 2, 1 அதிர்ஷ்ட நிறம்: இந்திர நீலம் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: Q, M
கன்னி :
ஏற்றுமதி தொழிலில் லாபம் தரும் வாரம். மனக்கசப்பு நீங்கும். நல்லோர்களின் பாராட்டுக் கிட்டும். பெண்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். நினைத்த காரியம் நிறைவேறும். பயணங்களால் பணம் கரையும். வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. வயிறு சம்பந்தமான நோய் வந்து நீங்கும். பங்குச் சந்தையில் லாபம் கூடும். திடீர் பயணம் உற்சாகம் தரும். பழைய பாக்கி வசூலாகும். தொழில் அபிவிருத்தி அடையும். புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். பிள்ளைகளால் மனக்கசப்பு வந்து நீங்கும். வீடு, மனை ஆசைகள் பூர்த்தியாகும். லஷ்மி கடாட்ஷம் பெருகும். சிரமப்பட்ட காரியம் நடைபெறும். தொழிலில் முதலீடு செய்வதை தவிர்க்கவும். பதவி உயர்வு கிட்டும். மனக்கசப்பு நீங்கும். அரசு வழியில் ஆதாயம் கிட்டும். கணவன், மனைவி உறவு மேம்படும். சுபகாரியம் இல்லத்தில் இனிதே நடந்தேறும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். பணநடமாட்டம் உண்டு. இயற்கை காட்சிகளைக் கண்டு இன்புறுவீர். உல்லாசப் பயணம் இனிக்கும். துன்பங்கள் அகலும். புதிய முயற்சி பலன் தரும். வெளிவட்டாரப் பழக்கம் அதிகமாகும். இல்லத்தில் மனமகிழ்ச்சி கிட்டும்.
வழிபட வேண்டிய தெய்வம்: தர்ம சாஸ்தா
அதிர்ஷ்ட எண்: 4, 7, 2, 1 அதிர்ஷ்ட நிறம்: பொன் நிறம் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: H, F
துலாம் :
துன்பம் அகலும் வாரம். நற்காரியங்களில் கீர்த்தி பெறுவீர்கள். பண நடமாட்டம் கூடும். செய்தொழில் சிறப்படையும். கலைஞர்களுக்கு ஒப்பந்தம் குவியும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி கிட்டும். ஒரு சிலருக்குக் கவுரவப் பதவி தேடி வரும். உத்தியோகத்தில் ஏற்றம் பெறுவீர்கள். புதிய வாகனம் வாங்குவீர்கள். பங்குச்சந்தை லாபம் தரும். கணவன் மனைவி உறவு இனிக்கும். நீண்ட தூரப்பயணம் லாபம் தரும். நிம்மதி பெருகும். இளைஞர்களுக்கு படிப்பிற்கு ஏற்ப உத்தியோகம் கிட்டும். உடல்நலம் சிறக்கும். மனதில் தெம்பும், தைரியமும் கூடும். புதிய தொழில் முயற்சியை தள்ளிப் போடவும். கொடுக்கல், வாங்கலில் சுமூக நிலை ஏற்படும். கணவன், மனைவி உறவில் ஒற்றுமை அதிகரிக்கும். உத்தியோக பெண்களுக்கு பதவி உயர்வு கிட்டும். பழைய சம்பள பாக்கிகள் வந்து சேரும். பொருளாதாரம் உயரும். பேச்சில் கனிவு தேவை. ஆனந்தம் குடிக்கொள்ளும். அணிகலன் ஆர்வம் அதிகரிக்கும். ஆலோசனை பூர்த்தியாகும். தொழில் வளர்ச்சி மேன்மை தரும். வங்கி சேமிப்பு உயரும். மாற்று இன நட்பு பெருகும். களவுப்போன பொருள் திரும்ப கிடைக்கும்.
வழிபட வேண்டிய தெய்வம்: பிள்ளையார்
அதிர்ஷ்ட எண்: 4, 9, 8, 1 அதிர்ஷ்ட நிறம்: ஆழ்ந்த வெண்மை அதிர்ஷ்ட எழுத்துக்கள்: H, D
விருச்சிகம் :
தேவைகள் பூர்த்தியாகும் வாரம். எதிரிகளின் தொல்லை குறையும். தனவரவு அதிகரிக்கும். பணியில் கண்டிப்பு அவசியம். வாக்குவாதங்கள் ஏற்படும். பெற்றோர் நலனில் அக்கறை தேவை. பிள்ளைகள் வழியில் தொல்லைகள் கூடும். ஆன்மீகச் சிந்தனை உதயமாகும். வீட்டுத்தேவைகள் பூர்த்தியாகும். புதிய வேலை வாய்ப்பு கிட்டும். திட்டமிட்ட செயல் வெற்றி பெறும். நட்டம் இல்லாத நன்மை அதிகரிக்கும். நண்பர்களால் நன்மை உண்டு. உறவினர்களால் வருகை உண்டு. அத்தியாவசிய செலவு அதிகமாகும். ஆடம்பர எண்ணம் மேலோங்கும். அடுத்தவர் தலையீடு அதிகமாகும். நெருப்பினால் அபாயம் உண்டு. ஆபரணப் பொருள் களவுப்போகும். பயணத்தில் வெகுமதி கூடும். தன்னம்பிக்கை துளிர்விடும். முடிவுகளில் தெளிவு இருக்கும். திறமைகள் வெளிப்படும். சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையும். சுபச்செய்தி வரும். சுயத்தொழில் வாய்ப்பு அமையும். மெத்தனப்போக்கு மாறும். மேன்மைகள் தொடரும். புதிய நட்பு உருவாகும். உடல்சோர்வு ஏற்படும். பக்கத்து வீட்டு பகை மாறும். சிரித்த முகத்தோடு காணப்படுவீர்கள். காரியத்தடை ஏற்படும். பேச்சில் பணிவு அவசியம்.
வழிபட வேண்டிய தெய்வம்: அஷ்டலட்சுமி
அதிர்ஷ்ட எண்: 2, 1, 4, 9 அதிர்ஷ்ட நிறம்: இளம்பச்சை அதிர்ஷ்ட எழுத்துக்கள்: G, K
தனுசு :
வெளியூர் பயணம் லாபம் தரும் வாரம். குடும்ப பாசம் அதிகரிக்கும். செல்வாக்கு உயரும். ஆடை, அணிகலன்கள் சேரும். சோதனையான எண்ணம் உருவாகும். கடன்தொல்லை நீங்கும். மன சந்தோஷம் அதிகரிக்கும். நண்பர்களால் அலைச்சல் உண்டு. எண்ணிய காரியம் கைகூடும். புண்ணிய ஸ்தலம் செல்வீர்கள். கமிஷன் தொழில் திருப்தி தரும். விவேகம் வெளிப்படும். வீண்செலவு ஏற்படும். குடும்ப அன்யோன்யம் அதிகரிக்கும். குதூகலமான எண்ணம் உதயமாகும். சிந்தனைகள் மேலோங்கும். விபரீத போக்கு மாறும். பேச்சில் நிதானம் தேவை. உதவும் குணம் அதிகரிக்கும். வணிகத்தொழில் வளம் கூடும். வனத்தொழில் உயர்வு தரும். குளிர்பான தொழில் கவனம் தேவை. பழைய பாக்கி வசூலாகும். வீட்டுத்தேவைகள் பூர்த்தியாகும். மனைவியின் அன்பு அதிகரிக்கும். எதிரிகள் பலம் குறையும். கலைத்துறை முன்னேற்றம் கொடுக்கும். பயணம் அனுகூலம் தரும். சொத்துச் சேர்க்கையுண்டு. குடும்ப ஒற்றுமை மேலோங்கும். மாணவர்கள் உற்சாகம் கூடும். புதிய முயற்சிகள் கவனம் தேவை.
வழிபட வேண்டிய தெய்வம்: மீனாட்சி அம்மன்
அதிர்ஷ்ட எண்: 4, 9, 2, 6 அதிர்ஷ்ட நிறம்: அரக்கு அதிர்ஷ்ட எழுத்துக்கள்: B, E
மகரம் :
அனுகூலமான வாரம். தனவரவு உண்டு. பொறுப்புக்கள் சிறப்பு சேர்க்கும். உறவினர் ஒற்றுமை பலப்படும். மறைமுக எதிர்ப்பு விலகும். ஆபரணச் சேர்க்கையுண்டு. குடும்ப கௌரவம் உயரும். சச்சரவுகள் அகலும். உத்தியோக உயர்வு உண்டு. இடமாற்றம் நன்மை தரும். வரவுகள் திருப்தி தரும். தொழில் விருத்தி உண்டு. வாகன மாற்றம் உண்டு. கமிஷன் தொழில் திருப்தி தரும். கலை ஈடுபாடு அதிகரிக்கும். வறுமைகள் ஒழியும். தனலாபம் கூடும். சந்தோஷம் அதிகரிக்கும். புதிய எண்ணங்கள் உருவாகும். கவலைகள் ஒழியும். கடன் பிரச்சனைகள் அகலும். சுபச்செலவுகள் அதிகரிக்கும். நண்பர்களால் வரவு உண்டு. விவசாயம் பலன் தரும். புதிய நட்பு ஏற்படும். அந்தஸ்து உயரும். உடல்நலம் சீராகும். விளையாட்டுத்துறையில் வெற்றி கிட்டும். சான்றோர்களின் சந்திப்புக் கிட்டும். கலைத்தொழில் நிலை உயரும். பேச்சில் இனிமைக் கூடும். திறமையால் பெருமை சேரும். வெளிநாட்டுத் தொடர்பு ஏற்படும். வாகனச் செலவு ஏற்படும். எதிரிகளால் தொல்லை உண்டு.
வழிபட வேண்டிய தெய்வம்: காமாட்சி அம்மன்
அதிர்ஷ்ட எண்: 6, 9, 1, 8 அதிர்ஷ்டநிறம்: சாம்பல் நிறம் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: Z, M
கும்பம் :
திட்டம் வெற்றி பெறும் வாரம். நீண்ட நாள் ஆசை நிறைவேறும். மனோ தைரியம் அதிகரிக்கும். ஆபரணச் சேர்க்கை ஏற்படும். பிள்ளைவழிச் செலவுகள் அதிகரிக்கும். உடல்நலம் கவனம் தேவை. உத்தியோக ஈடுபாடு அதிகரிக்கும். உறவினர் வழியில் செலவுகள் அதிகரிக்கும். ஞாபகத்திறன் கூடும். பேச்சில் நிதானம் தேவை. திருமண வாய்ப்புக் கூடி வரும். திடீர் லாபம் உண்டு. மனக்குழப்பம் நீங்கும். மற்றவர் உதவி கிட்டும். புதிய நட்பு உருவாகும். நீண்டநாள் கனவு நிறைவேறும். வெளியூர் பயணம் உண்டு. கவனமுடன் செயல்பட வேண்டும். பொருளாதாரம் உயரும். பொன், பொருள் சேரும். மருத்துவச் செலவு உண்டு. கமிஷன் தொழில் லாபம் தரும். மங்களச் செய்திகள் வரும். முயற்சிகள் பலன் தரும். ஆடம்பர எண்ணம் அதிகரிக்கும். அடுத்தவர் தலையீடு தவிர்க்கவும். புத்திரர்களால் மேன்மை உண்டு. குதூகலம் சேரும். பழையக்கடன் தீரும். கல்வியில் ஆர்வம் கூடும். பங்குத்தொழிலில் லாபம் தரும். பாதகம் விலகும். சாதகமான சூழ்நிலைகள் அமையும். பூமியால் லாபம் உண்டு.
வழிபட வேண்டிய தெய்வம்: ஸ்ரீ சக்கரத்தாழ்வார்
அதிர்ஷ்ட எண்: 4, 6, 2, 3 அதிர்ஷ்ட நிறம்: குங்கும கலர் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: I, M
மீனம் :
பெண்களுக்கு யோகமான வாரம். ஸ்திர சொத்துக்கள் சேரும். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். முயற்சிகள் பலன் தரும். உங்கள் தனித்தன்மை வெளிப்படும். சுயநலம் கூடும். காரியங்களில் வெற்றி காண்பீர்கள். கணவன், மனைவி ஒற்றுமை கூடும். பயணம் அனுகூலம் உண்டு. பங்குச்சந்தை லாபம் தரும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. விவாக முயற்சி வெற்றி தரும். சுபகாரியம் கைகூடும். உதவிகள் கிடைக்கும். வேலை பளு அதிகரிக்கும். பொறுப்புக்கள் கூடும். சிறப்புக்கள் சேர்க்கும். வியாபாரத்தில் விருத்தி ஏற்படும். அரசு வகையில் ஆதாயம் உண்டு. நற்காரியங்களில் ஈடுபடுவீர்கள். குடும்ப ஒற்றுமை அதிகமாகும். நல்லோர்களின் நட்பு கிடைக்கும். நிதி நிலைமை சீராகும். பணி செய்யும் இடத்தில் பாராட்டு கிடைக்கும். எதிரிகள் ஏமாற்றம் அடைவர். சுறுசுறுப்பு அதிகரிக்கும். புதிய முயற்சி பலிதமாகும். ஊதிய உயர்வு கிட்டும். வரவுகள் மிகுதியாகும். உடல்நலம் சீராகும். மருத்துவம் பலன் தரும். உறவினர்களின் ஒத்துழைப்பு கிட்டும். அனுகூலச் செய்திகள் வந்து சேரும்.
வழிபட வேண்டிய தெய்வம்: காளி துர்க்கா
அதிர்ஷ்ட எண்: 5, 4, 1, 3 அதிர்ஷ்ட நிறம்: வைலட் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: P, L