வி.தேவராஜ்
மூத்த ஊடகவியலாளர்.
- தமிழர்களுக்கு நீதி மறுக்கப்படும்வரை நாட்டுக்கு விமோசனம் இல்லை!
- தமிழர்களை அழிக்க துணை நின்ற சர்வதேசம் தமிழ் மக்களுக்குக் கூறப்போகும் பதில் என்ன?
வடக்கில் பருத்தித்துறையில் இருந்து தெற்கே தேவேந்திரமுனை வரை சுதந்திரம்பற்றியே பேசப்படுகின்றது. 75 வருடங்களுக்கு முன் பிரித்தானியர் இருந்தனர். இலங்கைக்கு சுதந்திரம் வழங்குகின்றோம் என்ற போர்வையில் ஒட்டு மொத்த இலங்கையையும் ‘பெரும்பான்மை இன ஆளும் வர்க்க ஜனநாயகத்திற்குள்‘ தள்ளிவிட்டுச் சென்றனர்.அன்றிலிருந்து தமிழர்கள் சுதந்திர இலங்கையில் தாம் இழந்த சுதந்திரத்திற்காக களத்தில் இறங்கினர்.
75 வருடங்கள் தமிழ் மக்களின் அரசியல் அபிலாiஷகளை தென்னிலங்கை அங்கீகரிக்க மறுத்தது. அது இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கின்றது.தென்னிலங்கை மக்கள் சிங்கள ஆளும் வர்க்கத்துடன் இணைந்து தமிழ் மக்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தனர்.அதேவேளையில் மாறிமாறி ஆட்சிபீடம் ஏறிய தென்னிலங்கையின் ஆளும் வர்க்கத்தினரை ஒவ்வொரு தேர்தலிலும் கண்மூடித்தனமாக போசித்தும் வந்தனர்.
இந்த வரலாற்றுப்போக்கில் 1948 இல் மலையக மகக்களின் பிரஜா உரிமையைப் பறித்து அரசியல் அநாதைகளாக்கினர்.தமிழ் மக்கள் 1958 இல் இருந்து தொடர்ச்சியாக இனக் கலவரங்களாலும் அரச பயங்கரவாதத்தினாலும் சிங்களக் காடையர்களாலும் குண்டர்களாலும் தாக்கப்பட்டனர். சொத்துக்கள் சூறையாடப்பட்டன.தமிழ் மக்களின் அகிம்சைப் போராட்டம்கூட அடக்கி ஒடுக்கப்பட்டது.இறுதியாக தமிழ் மக்களிடையே இருந்து ஆயுதப் போராட்டம் எழுந்தது.
இதனை அடக்க இந்தியா, அமெரிக்கா, சீனா ,பிரிட்டன், ஐ.நாடுகள், உக்ரேன்,ஜப்பான், மாலைத்தீவு, கியூபா, பாகிஸ்தான், ஈரான் என உலகமே திரண்டது. பல பில்லியன் டொலர்களை கொட்டி இலங்கை அரசாங்கத்துடன் கைகோர்த்து போரினை நடத்தின.
- சீனா – 7 பில்லியன் அமெரிக்க இராணுவ உதவி – உளவுத்துறை , பயிற்சிகளை இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கியது.
- அமெரிக்கா – 500 மில்லியன் அமெரிக்க இராணுவ உதவி. பயிற்சி, உளவுத்துறைசர்வதேச அரசியல் உதவி.
- பாகிஸ்தான் – 200 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்க இராணுவ,உளவுத்துறை உதவிகளை இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கியது.
- இந்தியா – 200 மில்லியனுக்கும் அதிகமான இராணுவ உதவி, உளவுத்துறை, பயிற்சி, சர்வதேச அரசியல் உதவிகளை இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கியது.
- இஸ்ரேல் – பிரதான ஆயுத விநியோகஸ்தராகச் செயற்பட்டது.
நுண்ணறிவு (டீடநர ர்ழசணைழn ருயுஏ) சிங்களத்தை உருவாக்க உதவியது – ஆயுதமேந்திய குடியேற்றங்கள்இ பயிற்சி மட்டுமே.
- கிரீஸ் – 3 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை நன்கொடையாக அளித்தது.
- இந்தோனேஷியா – கடல் புலிகள் மீது பல P2 APC இன்டெல் நன்கொடையாக இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கியது.
- கியூபா – சர்வதேச அரசியல் உதவியாக வழங்கியது.
- அவுஸ்திரேலியா இலங்கை இராணுவத்திற்கு 27 மில்லியன் அமெரிக்க டாலர்கள் உதவிகளை வழங்கியது.
- ஸ்லோவாக்கியா – 1.1 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள 10,000 ராக்கெட்டுகளை உதவியாக வழங்கியது.
- மாலத்தீவு – கடற்புலிகள் இராணுவ கண்காணிப்பு மீதான உளவுத்துறை சார்ந்த
உதவிகளை வழங்கியது.
- ஜப்பான் – உளவுத்துறை சர்வதேச அரசியல் உதவி.
- உக்ரைன் – கொழும்பிற்கு நான்கு மிக் – 27 ரக விமானங்களையும் $9.8 மில்லியன் டொலர்களையும் கொடுத்தது
- செக் குடியரசு – பல RM – 70 ராக்கெட் லாஞ்சர்கள் மற்றும் பிராகா V3 களை இலங்கை இராணுவத்திற்கு நன்கொடையாக வழங்கியது
- தென் கொரியா – உள்நாட்டுப் போரின் போது $531 USD மில்லியனை கொடுத்தது.
- ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் – அரசியல் உதவி ஈரோ 4.09 மில்லியன் ஆயுதங்களை உதவியாக வழங்கியது.
- ஐக்கிய நாடுகள் சபை – தமிழர்களைப் பாதுகாக்க எதுவும் செய்யவில்லை. இலங்கை அரசாங்கத்தின் இராணுவத் தாக்குதலுக்கு அரசியல் ரீதியாக ஒத்தாசையாக இருந்தது.
- பிரிட்டன் – 7 மில்லியன் அமெரிக்க டாலர் ஆயுதங்கள். STF உருவாக்குதல். இராணுவ நடவடிக்கைகளில் பங்கேற்கவும். SAS பயிற்சி. 2009 வரை இராணுவத்தை மேற்பார்வை செய்தல். சர்வதேச அரசியல் உதவியாக வழங்கியது.
- ஈரான் – 2008 இல் இலங்கை இராணுவத்திற்கு $1.05 பில்லியன் பெறுமதியான கச்சா எண்ணெயை வழங்கியது. 140.9 மில்லியன் பெறுமதியான ஆயுத ஒப்பந்தம். பயிற்சி வசதிகள்.
- இஸ்ரேல். – பிரதான ஆயுத சப்ளையர் நுண்ணறிவு (Bleu Horizon UAV) சிங்களத்தை உருவாக்க உதவியது – ஆயுதமேந்திய குடியேற்றங்கள்,பயிற்சி களை வழங்கியது.
இவ்வாறு இலங்கை அரசாங்கத்துடன் கைகோர்த்த இந்த நாடுகள் இறுதியில் ஆயுதப் போராட்டத்தை மௌனமாக்கியதுடன் தமிழ் மக்களை 1948 இல் பிரித்தானியர் எவ்வாறு சிங்கள ஆளும் வர்க்கத்திடம் கையளித்ததோ அதே போன்று 2009இல் களத்தில் நின்ற இந்த நாடுகள் அனைத்தும் தமிழ் மக்களையும் தமிழர் பிரதேசங்களையும் மீண்டும் சிங்கள ஆளும் வர்க்கத்திடம் கையளித்தனர்.
1948 க்கும் 2009க்கும் இடையில் ஒரு வித்தியாசம். 1948 இல் பிட்டன் உத்தியோகபூர்வமாக இலங்கையைவிட்டு வெளியேறியது. ஆனால் 2009 இல் பிரித்தானியா அமெரிக்கா சீனா இந்தியா என அனைத்து சர்வதேச நாடுகளும் இலங்கைக்கு உதவி என்ற போர்வையில் நங்கூரமிட்;டுள்ளன.
தென்னிலங்கை மக்கள் தாம் பெற்றதாக எண்ணிக் கொண்டிருந்த சுதந்திரம் சுதந்திரம் அல்ல என உணரத் தலைப்பட்டுள்ளனர். அதாவது ‘ஜனநாயக தேசத்தில் 75 ஆண்டுகாலம் ஜனநாயகம் இல்லாத நிலையில் வாழ்ந்து வந்திருக்கின்றோம் என்று சுடலை ஞானம் பெற்றவர்களாக தென்னிலங்கை பேசத் தொடங்கியுள்ளது. இதனைத்தான் தமிழ் மக்கள் கடந்த 75 வருடங்களாக கூறி வருகின்றனர்.
வடக்குக் கிழக்கில் கரி நாள் அனுஷ;டிக்கப்படுகின்றது. யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கிழக்கு நோக்கிய தமது பேரணியை நடத்தி முடித்துள்ளனர்.
தெற்கில் தமது வயிற்றில் வாழ்வாதாரத்தில் அடிவிழத் தொடங்கவே தெற்கு க்கு சுதந்திரதாகம் எடுத்துள்ளது.
அனால் தமிழ் தமிழ் மக்கள் கொண்டுள்ள சுதந்திரதாகம் என்பது இரத்தத்துடன் ஊறிப்போன உணர்வாக உள்ளது.
இந்த சுதந்திர தாகம் என்ற மையப் புள்ளியில் 75 வருடங்களுக்குப் பின்பும் ஒட்டு மொத்த தமிழ் மக்களுடன் தென்னிலங்கை இணைந்ததாக இல்லை.
ஆனால் 75 வருட ஊழல், 75 வருட கண்ணீர் இந்து சமுத்திரத்தின் முத்தான இலங்கை ஆசியாவின் கண்ணீர்த் துளியாக மாறியுள்ளது ஏன்று தென்னிலங்கை இன்று கண்ணீர் சிந்தத் தொடங்கியுள்ளது.;
சுதந்திர இலங்கையில் தமிழ்மக்களுக்கு மறுக்கப்பட்ட நீதி இலங்கையை இன்றைய இந்த நிலைக்குக் கொண்டுவந்துள்ளது என்பதை சிங்கள இனம் ஏற்றுக் கொண்டு பரிகாரம் காணும்வரை இலங்கையின் இந்த அவல நிலை தொடரவே செய்யும்.
- ‘சுதந்திர இலங்கையில் தென்னிலங்கை மக்களுக்கு ஏதாவது கிடைத்ததா?
ஆனால் இன்று 75 வருட ஊழல்,75 வருட கண்ணீர்: இந்து சமுத்திரத்தின் முத்து என போற்றப்படும் இலங்கை ஆசியாவின் கண்ணீர் துளியாக மாறியுள்ளதாக விசனப்படும் தென்னிலங்கை மக்கள் ‘சுதந்திர இலங்கையால‘; தமக்கு ஏதாவது கிடைத்ததா? என தமக்குத்தாமே கேள்வி எழுப்பி நிற்கின்றனர்.
இந்த ஒரு நிலையில்கூட 75 வருடங்களாக சுதந்திர இலங்கையில் நீதி மறுக்கப்பட்ட நிலையில் வாழும் தமிழ் மக்களுடன் அதிகாரப் பகிர்வுடன் சமரசமாக கைகோர்த்துப் பயணிக்கும் பக்குவத்தை நோக்கி நகர மறுப்பது விசித்திரமாக உள்ளது..
- ‘இனவாத அரசியலுக்குள்’ குளிர் காயும் ஆளும் வர்க்கம்
சுதந்திர இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான ‘இனவாத அரசியலுக்குள்‘ குளிர் காய்ந்து தென்னிலங்கையின் ஆளும் வர்க்கம் செய்ததெல்லாம் நாட்டைச் சூறையாடி தம்மையும் தாம் சார்ந்தோரையும் வளப்படுத்திக் கொண்டதுடன் அழிவுகரமான பிளவுபடுத்தும் கொள்கையினால்இ தேசிய மற்றும் மதப் பிரச்சினைகளால் தேசத்தை கூறு போட்டு மக்களை பிளவுபடுத்தியதைத் தவிற வேறு ஒன்றுமில்லை.
இன்று தென்னிலங்கை மாத்திரமல்ல ஒட்டு மொத்த இலங்கையும் சிந்துவதாகக் கூறுகின்ற கண்ணிர்த் துளிகள் இதில் இருந்தே பிறக்கின்றன என்ற உண்மையை உணர்ந்தாக வேண்டும்.
- ‘பிணங்களின்’ மீது ஆட்சி
மனித பேரழிவுகளை உருவாக்கி ‘பிணங்களின்‘ மீது ஆட்சியமைப்பதில் தென்னிலங்கை அரசியல்வாதிகள் கைதேர்ந்தவர்கள். கத்தோலிக்க தேவாலயங்கள் மீதான தாக்குதல்கள் போல் பல சம்பவங்கள் உதாரணங்களாக உள்ளன.
தற்போதும் அதேபாணியில் பிணக் குவியலுக்கள் ஆட்சியினைத் தக்க வைத்துக் கொள்ள காய்கள் நகர்த்தப்படுவதாகத் தெரிகின்றது.
- ‘கண்ணீர் சிந்தும்‘மக்களும் மௌனிகளாக இருக்கின்றனர்.
அரசியலமைப்பில் உள்ள 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது பற்றிய விடயம் சர்ச்சையாக்கப்பட்டு வருகின்றது. அரசியலமைப்பை நடைமுறைப்படுத்த வேண்டாமென கோரும் சக்திகளுக்கு சம்மதம் தெரிவிப்பதுபோல தென்னிலங்கையில் ‘கண்ணீர் சிந்தும்‘; மக்களும் மௌனிகளாக இருக்கின்றனர்.
- ‘இன்று எமக்கு நாளை உங்களுக்கு’
தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அடக்குமுறைஇ அரச பயங்கரவாதம்இ அரசியலமைப்புக்கு மாறான நகர்வுகள் அனைத்துமே தென்னிலங்கையில் பெரும்பாலானவர்களால் கை தட்டி வரவேற்கப்பட்டன. இன்று அதே அடக்கமுறைகள்இ அரச பயங்கரவாதம் என்பன தென்னிலங்கை மீதும் திரும்பியுள்ளன. வசந்த முதலிகே மற்றும் இன்னும் பலரும் இவைகளுக்குச் சாட்சியாக தென்னிலங்கையின் முன் நிற்கின்றனர்.
‘இன்று எமக்கு நாளை உங்களுக்கு‘ என தமிழ் மக்கள் கூறியது இன்று அரங்கேறுகின்றது.
மொத்தத்தில் கூறுவதானால் இலங்கையில் தமிழர்களுக்கு நீதி மறுக்கப்படும்வரை நாட்டில் அபிவிருத்தியையோ சுபீட்சத்தையோ எதிர்பார்க்க முடியாது. தென்னிலங்கைக்கு வரலாறு சொல்லும் பாடம் இது.
தென்னிலங்கையின் ஆளும் வர்க்கம் கடந்த 75வருடங்களாக மாறவே இல்லை. தமிழ் மக்களில் இருந்து பல விசுவாசிகளை தனக்காக உருவாக்கிக் கொண்டது. இறுதியில் அந்த விசுவாசிகளை வைத்தே தமிழ் மக்களின் கண்களைக் குத்தினர். ஆனால் தமிழ் மக்களில் இருந்து விசுவாசிகள் முளைத்துக் கொண்டே இருக்கின்றனர்.
தற்போதும்கூட தென்னிலங்கை மக்கள் சுதந்திரத்தால் தாம் பெற்றது என்று ஒன்றும் இல்லை. ஆளும் வர்க்கமே பயன் பெற்றுள்ளனர் என்று கூறி சுதந்திர தினத்தை கரி நாளாக அனுஷ;டிக்கின்றனர்.ஆனால் சுதந்திரத்தால் தமிழ் அரசியல்வாதிகள் எவரோ பெற்ற சலுகைகளுக்காக எம்மவர்கள் யாழில் வவுனியாவில் மட்டக்களப்பில் ஊர்வலம் போகின்றனர். என்னே பரந்த மனது இவர்களுக்கு.தென்னிலங்கை மக்களும் தமிழ் மக்களும் பெற்றுக் கொள்ளாத அனுபவிக்காத சுதந்திரத்தை இவர்கள் எங்கிருந்து எவ்வாறு பெற்றனர் என்று தெரியவில்லை.
- மாற்றத்திற்காக தேர்தல்களை நோக்கி காத்திருக்கும் தென்னிலங்க
75 ஆண்டுகள் என்பது நீண்ட காலம். 75 ஆண்டுகால துன்பம்இ கண்ணீரும்இ வியர்வையும்இ ரத்தமும் முடிவுக்கு வர வேண்டும். ஒரே வழி திறந்திருக்கும் ஒரே வழிஇ வாக்குச் சாவடியில் வாக்குச் சீட்டு மூலம் அடையக்கூடிய அமைப்பு மாற்றம்தான் என்று தென்னிலங்கை தேர்தல்களுக்காக காத்திருக்கின்றது. ஆனால் இந்த ‘பெரும்பான்மை இன ஜனநாயகத்திற்குள்‘ தமக்கான தீர்வைத் தேடி தமிழ் மக்கள் தொடர் தோல்விகளையே சந்தித்துக் கொண்டிருக்கின்றனர்.
இலங்கையின் இறைமையையும்; தமிழரையும் பத்திரமாக சிங்கள ஆளும் வர்க்கத்திடம் ஒப்படைத்த பிரிட்டன் அதற்குப் பிறகு தமிழர்களைக் கண்டு கொள்ளவே இல்லை.
- மாற்றத்திற்காக தேர்தல்களை நோக்கி காத்திருக்கும் தென்னிலங்கை
ஆனால் தமிழர்கள் பொறுமை இழந்து கிளர்ந்தெழுந்தபோது சர்வதேசமே அணி திரண்டு பல பில்லியன் டொலர்களைக் கொட்டி தமிழ் மக்களை முள்ளிவாய்க்காலுக்குள் தள்ளி அழித்து மீண்டும் இலங்கையின் ஆளும் வர்க்கமான ‘பெரும்பான்மை இன ஜனநாயகத்திற்குள்‘ தள்ளிவிட்டுள்ளது.
இலங்கையின் ஆளும் வர்க்கத்தை வழிக்குக் கொண்டுவந்து இன விவகாரத்துக்கான தீர்வை வழங்கி வடக்குக் கிழக்கில் ஆயுதங்களாக கொட்டிய பல பில்லியன் டொலர்களை இலங்கையின் அபிவிருத்திக்குப் பயன்படுத்தியிருக்கலாம். ஆனால் அது நடைபெறவில்லை.
ஆனால் தமிழ் மக்களை சர்வதேசத்தின் உதவியுடன் அழித்த இலங்கையின் ஆளும் வர்க்கம் இன்று நாட்டையும் சூறையாடி தென்னிலங்கை மக்களை மாத்திரமல்ல ஒட்டு மொத்த இலங்கையும் கையறு நிலைக்குக் கொண்டு சென்றுள்ளது.
அது மாத்திரமல்ல தென்னிலங்கையின் ‘ஜனநாயகக் கதாநாயகர்கள்‘ இன்று வீழ்ந்து கிடக்கும் இன்றைய நிலையிலும் வேதாளம்போன்று மீண்டும் முருங்கை மரத்தில் ஏறி நின்று 13 வது திருத்தமா? தமிழர்களுக்கென எதனையும் கொடுக்கத் தயாரில்லையென பிரகடனப்படுத்தி நிற்கின்றனர்.
தமிழர்களை அழிக்க துணை நின்ற சர்வதேசம் இப்பொழுது தமிழ் மக்களுக்குக் கூறப்போகும் பதில் என்ன?
‘நமது இருண்ட தருணங்களில்தான் ஒளியைக் காண நாம் கவனம் செலுத்த வேண்டும்.’ என அரிஸ்டாட்டில் கூறியதை கவனத்தில் எடுத்து தமது பாதையை தாமே வெட்டிப் பயணம் போக வேண்டுமென்பதையே இலங்கையின் ஆளும் வர்க்கமும் சர்வதேச ஆளும் வர்க்கமும் தமிழ் மக்களுக்கு பாடம் புகட்டி நிற்கின்றனர்.