75வது சுதந்திரத்தை முன்னிட்டு தூய்மையான இலங்கையை உருவாக்குவோம் வேலைத்திட்டத்தின் எட்டாவது நிகழ்வாக மூலிகைகள், பூக்கன்றுகள், மரங்கள் நடுகை செய்யும் நிகழ்வு அல் அமீர் வித்தியாலயத்தில் நியூ சன் ஸ்டார் இளைஞர் கழகத்தின் தலைவரும் இளம் விஞ்ஞானியுமான – வினோஜ்குமார் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இதன் போது பிரதம அதிதியாக மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி முபாறக் அவர்களும், பாடசாலை அதிபர் சமீர் அவர்களும், இளைஞர் சேவை அதிகாரி இஸ்மாயில் அவர்களும், இளைஞர் சேவை சம்மேளனத்தின் தலைவர் தசீன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இதன் போது நியூ சன் ஸ்டார் இளைஞர் கழகத்தின் அங்கத்தவர்கள் அனைவராலும் மூலிகைகள் பூக்கன்றுகள் மரங்கள் நடுகை செய்யப்பட்டது விசேட சிறப்பம்சமாகும். விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சினால் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.