செல்லையா, நல்லம்மா தம்பதியினருக்கு
வந்துதித்த செந்தாமரை நீயல்லோ
இங்கு ஆண்டொன்று சென்றாலும்
ஆற்றொணாத் துயர்தன்னில்
நான் பாழ் உலகில் வாழ்கின்றேன்
பாவிதன்னைப் பாராயோ!
மீண்டும் இங்கே வாராயோ – என்
வேதனைகள் தீராயோ
கட்டிய கணவன் நான் இங்கிருக்க
கண்மணியே நீ போனதெங்கோ?
கண்ணீர் ஒன்றே தஞ்சமென்று – என்
கவிதை உன்னை கெஞ்சுதம்மா
ஆழ்கடல் தான் உன் அன்பு – அதில்
அலைபோல் தவழ்ந்தோம் உன் மடியில்!
தேன் போன்ற உன் சிரிப்பில் – அதில்
நம் சினம் கூட அடங்கிவிடும்
சில கணத்தில் உன்னடியில்!
கரம் கூப்பி வேண்டுகின்றோம்
மீண்டும் இங்கே வாராயோ?
இந்த கண்ணீர் வாழ்க்கை தேவையில்லை – உன்
கருவறை ஒன்றே போதும் அம்மா
தவிக்கின்றோம் தவிக்கின்றோம்
நாங்கள் இன்று உன் பிரிவால்
மீண்டும் இந்த தரணியில்
தவழ்வதும் என்றோ அன்பே.
உன் ஆத்மா சாந்திக்காக என்றும் பிரார்த்திக்கும்
உன் அன்புச் செல்வங்கள்
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
என்றும் கண்ணீருடன் பிரார்த்திக்கும்
உன் அன்புக்கணவன், உடன்பிறப்புக்கள், பிள்ளைகள்,
மருமக்கள், பேரப்பிள்ளைகள்