இந்திய மொழிப் பத்திரிகைகள், தமிழ் பத்திரிகைகள் மற்றும் ஆங்கிலப் பத்திரிகைகள் ஆசிரியர்களைச் சந்தித்த ரொறன்ரோ இந்திய துணைத்தூதுவராலய துணைத்தூதுவர் ஶ்ரீமதி அபூருவா ஶ்ரீவஸ்டவ்
கனடா ரொறன்ரோ மாநகரில் உள்ள இந்திய துணைத்தூதுவராலயத்தில் துணைத்தூதுவராக பணியாற்றும் ஶ்ரீமதி அபூரு;வா ஶ்ரீவஸ்டவ் அவர்கள் ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள இந்திய மொழிப் பத்திரிகைகள், தமிழ் பத்திரிகைகள் மற்றும் ஆங்கிலப் பத்திரிகைகள் ஆகியவற்றின் ஆசிரியர்களைச் சந்தித்து உரையாடினார்.
மேற்படி ஊடகதுறை ஆசிரியர்கள் மற்றும் செய்தியாளர்கள் அனைவரையும் அழைத்து அவர் நடத்திய வரவேற்புபசார வைபவத்தில் கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்று உரையாடி அவர்கள் அனைவரதும் கருத்துக்களையும் அவர் கேட்டறிந்தார்.
துணைத்தூதுவர் ஶ்ரீமதி அபூரு;வா ஶ்ரீவஸ்டவ் அவர்கள் அங்கு பத்திரிகைகளின் ஆசிரியர்கள் மத்தியில் உரையாற்றிய போது கனடா – இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக மற்றும் கலாச்சார உறவுகள் சீராக இருப்பதாகவும் அவை இன்னும் முன்னேற்றம்; காணும் வாய்ப்புக்கள் அதிகமாக இருப்பதாகவும் . அத்துடன் கனடாவில் மாத்திரம் சுமார் 80 ஆயிரம் தொழில் வல்லுனர்கள் இந்திய கடவுச்சீட்டுக்களுடன் பணியாற்றி வருவதாகவும் கனடாவின் பொருளாதார மேம்பாட்டிற்காக இந்திய பிரஜைகள் அதிக பங்களிப்புச் செய்வதைக் கண்டு தான் பெருமை கொள்வதாகவும் குறிப்பிட்டார்.