வ.தேவராஜ்
மூத்த ஊடகவியலாளர்
- தலைவரின் உயிப்பு யாருக்குத் தேவை?
- தமிழ் மக்களை பேரழிவுக்குள் சிக்க வைக்கப் போகின்றார்கள்‘
தஞ்சாவூர் மாவட்டம் வில்லாரில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் தமிழ் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் செய்தியாளர்களிடம் பேசுகையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வி. பிரபாகரன் இன்னும் உயிருடன் இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார். இந்தச் செய்தி இலங்கையைவிட இந்தியாவிலேயே பரபரப்பாகப் பேசப்பட்டது. இந்திய ஊடகங்களில் தலைப்புச் செய்திகளாகவும் மாறியது.
பழ.நெடுமாறன் அவர்கள் மேற்படி அறிவிப்பை பெப்ரவரி 13 ஆம் திகதி வெளியிடப் போகின்றார் என்ற செய்தி தமிழகத்தில்மாத்திரமல்ல புலம்பெயர் தமிழர்கள் மத்தியிலும் முதல் நாளான 12 ஆம் திகதியே பரவத் தொடங்கியது.
புலம்பெயர் தமிழர்கள் பலர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் குறித்த மேற்படி அறிவிப்பை வெளியிட வேண்டாமென பழ நெடுமாறன் அவர்களிடம் கேட்டுக் கொண்டதாக தற்போது செய்திகள் வெளிவந்துள்ளன.அத்தகைய வேண்டுகோள்களைப் புறம் தள்ளி பழ நெடுமாறன் அவர்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.தற்போது இந்த அறிவிப்பு பேசுபொருளாக மாறியுள்ளது.
வல்லுநர்கள் நெடுமாறனின் அறிக்கையை ஒதுக்கித் தள்ளுகிறார்கள், அவர் கடந்த காலங்களிலும்
இதே போன்ற கூற்றுக்களை தொடர்ச்சியாகக் கூறி வந்துள்ளார் என்று ‘த இந்து‘ குறிப்பிட்டுள்ளது.
- தமிழர்களுக்கு நன்மை பயக்கும் தாக்கத்தை ஏற்படுத்தாது‘
அந்தச் செய்தியில் மூத்த தமிழ் ஊடகவியலாளர் வி.தனபாலசிங்கம்,இலங்கையின் அரசியலில் இந்த அறிக்கையால் ஏற்படக்கூடிய பாதகமான தாக்கம் குறித்து கவலை தெரிவித்துள்ளார்.
‘இலங்கை ஆயுதப் படைகளின் பலத்தைக் குறைப்பதற்கும் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் முயற்சிகளை எதிர்க்கும் இனவாத சக்திகளின் கரங்களை இந்த அறிக்கை பலப்படுத்தலாம். இது தமிழர்களுக்கு எந்த விதத்திலும் நன்மை பயக்கும் தாக்கத்தை ஏற்படுத்தாது‘ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மறுபுறம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் மகள் துவாரகா தலைமையில் ஈழ விடுதலைக்கான அரசியல் இயக்கம் தொடங்கப்படலாம்; அதனை மத்திய பாஜக அரசு ஆதரிக்கலாம். இதற்காகவே பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்கிற செய்திகள் பரப்பிவிடப்பட்டிருக்கலாம் என பிரபாகரனுக்கு நெருக்கமான தமிழ்நாட்டு அரசியல் தலைவரான தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கோவை ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். என்ற செய்தியும் வெளிவந்துள்ளது.
- சுபாஷ் சந்திரபோஸின் செய்தியைப் போலவே பிரபாகரனின் மரணமும் மர்மமாகவே இருக்கும்.
உள்நாட்டுப் போருக்குப் பிறகு உடனடியாக இலங்கை அரசால் அறிவிக்கப்பட்ட போர்க்களத்தில் பிரபாகரன் இறந்தார் என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியாது.அவரது மரணத்தை உறுதிப்படுத்துவது இலங்கை அரசாங்கத்தின் அரசியல் மற்றும் இராணுவ நோக்கத்திற்காக இருந்தது. பிரபாகரன் போர்க்களத்தில் இறந்திருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம். அவரது மரணத்தில் உச்சக்கட்ட சந்தேகங்கள் இருப்பதால், இந்திய தேசியவாத மாவீரன் சுபாஷ் சந்திரபோஸின் செய்தியைப் போலவே அவரது மரணமும் தொடர்ந்து மர்மமாகவே இருக்கும். என்று மலேசியாவின் பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமி தெரிவித்துள்ளார்.
போஸைப் போலவே பிரபாகரனும் சாதாரண தலைவர் இல்லை. போர் 2009 ,இல் மௌனிக்கப்படும்வரை உலகின் கடுமையான தேசிய விடுதலை இயக்கங்களில் ஒன்றான விடுதலைப் புலிகளின் தலைவராக இருந்தார். பிரபாகரன் மீதான மரியாதை மற்றும் மரியாதையைக் கருத்தில் கொண்டு,அவரது மரணம் உண்மையாக இருந்தாலும் கூட,உணர்வு ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லாத பிரிவினர் தமிழர்களிடையே உள்ளனர். நிச்சயமாகஇ பிரபாகரன் சாகவில்லை என்பதை இன்னும் சில தமிழ் தேசியவாத இயக்கத்தின் தமிழ்நாட்டின் சில தலைவர்கள் அவரை உயிரோடு வைத்திருக்கிறார்கள். நெடுமாறன் அப்படிப்பட்ட தலைவர். என்றும் பேராசிரியர் ராமசாமி குறிப்பிடுகின்றாh.;;
பிரபாகரன் இறக்கவில்லை என்ற உண்மையை உயிருடன் வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் உளவியல் கூறுகளைக் கொண்டுள்ளது. ஆனால் அரசியல் நோக்கமும் உள்ளது. எனக் கூறும் பேராசிரியர் ராமசாமி
- இது இந்தியாவில் மட்டுமல்லாது ஏனைய நாடுகளிலும் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவதற்கான நகர்வுகளை சிக்கலாக்கி ஏமாற்றமடையச் செய்யலாம்.
- இரண்டாவதாக, பிரபாகரனின் உடனடித் திரும்புதல் பற்றிய தவறான நம்பிக்கையை இலங்கையிலும் பிற இடங்களிலும் உள்ள தமிழ் அமைப்புகளுக்கு வழங்கலாம்.
- பிரபாகரன் இறந்தாலும், உயிரோடு இருந்தாலும் பரவாயில்லை. தற்போதைய தமிழினத் தலைமைகள் பல்வேறு பொருளாதார, சமூக மற்றும் அரசியல் சூழ்நிலைகளின் கீழ் விடுதலைப் போராட்டத்தைத் தக்கவைப்பதற்கான வழிகளையும் வழிமுறைகளையும் கண்டறிய வேண்டும் என்றும் தாயக தமிழ்த் தலைமைகளுக்கு அவர் அறிவுரையும் வழங்கியுள்ளார்.
கோத்தபாய ராஜபக்ஷ
இலங்கையில் சிங்கள அரசியல்வாதிகள் ஒருமித்த குரலில் பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என்றே கூறி வருகின்றனர். இந்நிலையில் 2009-ம் ஆண்டு பிரபாகரன் மரணம் அடைந்ததாக சொல்லப்பட்ட காலத்தில் இறுதி யுத்தத்தை முன்னெடுத்த இலங்கை பாதுகாப்புத் துறை செயலரும் பின்னாளில் ஜனாதிபதியானவருமான கோத்தபாய ராஜபக்சேவும் கருத்து தெரிவித்துள்ளார்.
மனநோயாளிகள்தான் பிரபாகரனை முன்வைத்து அரசியல் செய்வார்கள். பிரபாகரனின் உடலை கைப்பற்றி எரித்த 2009-ம் ஆண்டே அத்தனையும் முடிந்து போய்விட்டது. முடிவுக்கும் வந்துவிட்டது. பிரபாகரன்இ மனைவிஇ மகள்இ மகன்கள் அனைவருமே 2009-ம் ஆண்டு இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டுவிட்டனர். ஆகையால் பிரபாகரனை முன்வைத்து அரசியல் செய்கிற மனநோயாளிகளுக்கு நாம் பதிலளிபது வெட்கக் கேடானது என கூறியுள்ளார்.
- முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ
இதேபோல் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் பிரபாகரன் உயிரோடு இருப்பதை நிராகரித்துள்ளார். 2009-ம் ஆண்டு பிரபாகரன் மரணம் அடைந்துவிட்டார். அப்போதே உறுதி செய்துவிட்டோம் என்றார்.
- சரத் பொன்சேகா
இலங்கை முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகாஇ 14 ஆண்டுகளாக பழ.நெடுமாறன் பொய்யையே திரும்ப திரும்ப சொல்லி வருகிறார்.
இ தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் கடைசி துப்பாக்கி குண்டு வரை எதிர்கொண்டார். அதனால் அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை எப்போதும் இருக்கிறது. என கூறியுள்ளார்.
இவ்வாறு தமிழக ஊடகங்களின் பெரும் பகுதியை பழ நெடுமாறன் ஐயா நிரப்ப வைத்துவிட்டார்.
ஆனால் இந்திய ஊடகங்களில் குறிப்பாக தமிழக ஊடகங்களில் காணப்பட்ட சலசலப்பை இலங்கை ஊடகங்களில் காண முடியவில்லை.
- தலைவரின் உயிப்பு யாருக்கு வேண்டும்
இந்தச் செய்திகளுக்குள் தேசியத் தலைவரின் உயிப்பு திடீரென இப்போதைக்கு யாருக்குத் தேவைப்படுகிறது என்ற ஆராய்ச்சிகளும் ஊடகங்களில் காணலாம்.
- இராணுவ ஆய்வாளர் அருஸ்
இலண்டன் இராணுவ ஆய்வாளர் அருஸ் ‘தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் இறந்துவிட்டார் என்று தமிழ்அமைப்புக்கள் உறுதிப்படுத்தவில்லை.இலங்கைஅரசாங்கமேஅவருடையஇறப்பைஉறுதிப்படுத்தியுள்ளது.
நெடுமாறன் அவர்களின் கூற்றில் பின்புலம் உள்ளது. இதன் பின்னணியில் இந்தியாவே உள்ளது. இந்தியா இன்று முகம் கொடுக்கின்ற இன்றைய உள் நாட்டு நெருக்கடிகள் மற்றும் பூகோள அரசியல் நிலைமைகளால் ஏதாவது நகர்வை மேற்கொண்டாக வேண்டும் என்ற நிலையில் பழ நெடுமாறனின் கூற்றின் பின்புலத்தில் உள்ளது.
இந்த அறிக்கை மூலம் தமிழ் மக்களுக்கும் உலக நாடுகளுக்கும் இடையில் பிரச்சனைகளை ஏற்படுத்துவதாகவே உள்ளது. இதற்கும் அப்பால் தமிழ் மக்களை இந்திய நலன்களுக்காக பேரழிவுக்குள் சிக்க வைக்கப் போகின்றார்கள்‘ என்றும் பேட்டியொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளையில் இந்த விவகாரம் குறித்த தமிழ் மக்களின் உணர்வலைகள் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
- இந்த அறிவிப்பு தமிழீழ விடுதலைப் புலிகள் மூலமாக ஏன் வெளிவரவில்லை. தலைவர் மூலமாகவோ அல்லது; விடுதலைப் புலிகள் மூலமாகவோ இந்த அறிவிப்பு வெளிவராமல் மூன்றாம் தரப்பின் முலம் வெளிவருவது மர்மம் நிறைந்ததாக உள்ளமை சிந்திக்க வேண்டியதாக இருக்கின்றது.
- பிரபாகரன் என்ற குண்டைத் தூக்கிப்போட்டு அதானி விவகாரத்தை மூடிமறைத்துவிட்டார்கள்.
- தமிழ் மக்களை மீண்டும் பலி கொடுக்க இந்தியா தயாராகிவிட்டது
- தமிழக மக்களே இதனை நம்பாதீர்கள்.
- ஈழத் தமிழர்களை மீண்டும் புதைகுழிக்கு இழுத்துச் செல்லாதீர்கள். இந்திய அரசியல் நலன்களுக்குள் தமிழர் வாழ்வை புதைக்காதீர்கள்.
இவ்வாறு பல விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றன.
மொத்தத்தில் தமிழ்மக்களை மீண்டும் ஒரு முள்ளி வாய்க்கால் நோக்கி இழுத்துச் செல்வதாகவே இந்திய அரசின் பின்பலத்திலான பழ நெடுமாறன் ஐயா அவர்களின் அறிவிப்பு அமைந்துள்ளது.
ஆனால் பழ நெடுமாறன் ஐயா கூறியதில் ஒரு உண்மை தொக்கி நிற்கின்றது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் மரணிக்கவில்லை என்பது உண்மைதான்.
2009 ஆம் ஆண்டு மே 19 ஆம் தகதி அதிகாலையில் இலண்டனில் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு எனக்கு வந்தது. அந்த அழைப்பை ஏற்படுத்தியவர் எனது பல்கலைக்கழக சகாவான பத்தர். அதாவது கேபி என்று அழைக்கப்படும் பத்மநாதன்.’தலைவர் இறந்துவிட்டார்.தமிழ் உலகம் அவருக்கு மாபெரும் அஞ்சலி செலுத்த வேண்டும்‘ என்றார். அவ் வேளையில் எனது மனதும் அதனை ஏற்றுக் கொள்ள மறுத்தது.
இந்தச் சம்பவம் நடைபெற்று சிறிது காலத்திற்குப் பிறகு எனது ‘கேசரி‘ இளம் பத்திரிகையாளர்களுடன் போர் நடந்த பகுதிகளுக்கு செய்தி சேகரிப்புக்காகவும் மக்களின் போர்க்கால நேரடி அனுபவங்களையும் பெறுவதற்காக சென்றிருந்தோம்.
அவ்வேளையில் அனுமதிக்கப்பட்ட நந்திக் கடல் பகுதியில் ஒரு உருவம் கடலை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தது. போரின்போது nஷல்கள் அவரது உடம்பைப் பதம் பார்த்ததுடன் ஒரு காலையும் ஊனமாக்கி இருந்தது.தமது உறவுகளையும் சுற்றத்தாரையும் இழந்து தனி மரமாக நின்று கொண்டிருந்த அவரை அணுகினேன்.
- “தலைவரின் வரவுக்காகக் காத்திருக்கின்றோம்‘
‘இளைஞர்களின் வீரம் விளைந்த மண் இது என்றார். ‘nஷல் வீச்சுக்குள்ளும் நாம் எல்லோரும் சுதந்திரக் காற்றை சுவாசித்தோம்.அந்த சுதந்திரம் முழுமையாக எமக்குக் கிடைக்காது போய்விட்டது.இந்தக் கனம் எம் முன் அவர் வந்து நின்றால் நாங்கள் அணைவரும் அணிவகுத்து அவர் பின்னால் போய்விடுவோம்‘ என்றவர் ‘ தலைவரின் வரவுக்காகக் காத்திருக்கின்றோம்‘ என்று கூறி முடித்தார்.
- ”தலைவர் மரணிக்கவில்லை”
இவருக்கு தலைவர் மரணிக்கவில்லை. இதே மன நிலையில்தான் ஒட்டு மொத்த தமிழினமும் உள்ளது என்பதை ‘ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்‘ என்ற வாசகத்தை போரின் எச்சமாக நின்றபோதும் நெஞ்சை நிமிர்த்தி அவரின் வரவுக்காகக் காத்திருக்கின்றது அந்த ஜீவன்.
தலைவர் மரணிக்கவில்லை.காலத்தை வென்று தமிழ் மக்களின் மனங்களில் வாழ்கின்றார் என்பதையே பழ நெடுமாறன் ஐயாவின் கூற்று 2009 க்குப் பிறகு உணர்த்தி நின்றது.
ஆனால் இன்றைய அவரது கூற்று?