ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள பாசிப்பட்டினம் மீனவ கிராமத்தில் வருடந்தோரும் கோவில் திருவிழாவின்போது பாய்மரப்போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். இந்நிலையில், ஸ்ரீவல்லபை கணபதி ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் விழாவை முன்னிட்டு மாநில அளவிலான பாய்மரப்படகு போட்டியானது கிராமத்தின் சார்பாக நடத்தப்பட்டது. இப்போட்டியானது 10 கிலோமீட்டர் தூரம் வரை நிர்ணயிக்கப்பட்டு துவங்கப்பட்டது. பாய்மரப்படகுகள் ஒன்றோடு ஒன்று முந்தி சீறி பாய்ந்து போட்டி போட்டு முந்தி சென்றது.
இப்போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்த படகுகளுக்கு ரொக்கப்பரிசும், சுழற்கோப்பையும் கிராமத்தின் சார்பாக வழங்கப்பட்டது. இப்போட்டியில் பாசிப்பட்டினம், நம்புதாளை, தொண்டி, நம்புதாளை, முள்ளிமுனை, திருப்பாலக்குடி, புதுப்பட்டினம், கோட்டைப்பட்டினம் ஆகிய பகுதிகளில் இருந்து 35 பாய்மரப்படகுகள் கலந்து கொண்டன, ஒரு படகிற்கு 6 நபர்கள் வீதம் 210 நபர்கள் போட்டியில் கலந்து கொண்டு பங்கேற்றனர். மேலும், ஏதேனும் விபத்துகள் ஏற்பட்டால் முன்னெச்சரிக்கையாக இருக்க 108 ஆம்புலன்ஸில் நடமாடும் மருத்துவமனை மருத்துவர்கள் தயார் நிலையில் இருந்தனர். இதனைக்கான சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வந்து கரையில் நின்று கண்டுரசித்தனர்.