மனிதர் பல பிறவிகளாக தம் துன்பம் தீரவேண்டுமென பக்தி செய்து கொண்டு வருகின்றனர். அதில் சிவராத்திரி விரதமும் சிவனைக் குறித்து அனுட்டிக்கும் மகத்துவமான விரதமாகும். பக்தியின் சம்பிரதாயங்கள் அனைத்தும் இறைவனைப்பற்றி தம் பதிவுகளில் இருந்து மனிதர்களால் உருவாக்கப்பட்டவை ஆகும். பலவீனத்தால் பாவம் செய்கின்ற மனிதர் தமக்கு தெரிந்த வழியில் விக்கிரகங்களையும் அமைத்து வழிபாட்டு முறைகளையும் உருவாக்கி செய்தாலும் கூட துன்பம் திரவில்லை.மாறாக அதிகரிக்கிறது.
இதிலுள்ள சில அம்சங்களை நோக்கினால் அதில் பகவானின் அவதாரத்தையே குறிப்பது தானாக விளங்கிக் கொள்ளமுடிகிறது.
1. சிவலிங்க வழிபாடு
ஆத்மாக்கள் வந்து சரீரமெடுத்து வாழும் இப்பௌதீக உலகில் தனக்கென சரீரமெடுக்காதவரான சிவன் வந்து நன்மை செய்ததாலேயே அந்த நன்மையை அனுபவித்த மனிதரின் பதிவுதானே சிவலிங்கமாக அமைத்து வழிபாடு செய்கின்றனர்.
2. சிவலிங்கத்தின் தோற்றம்
ஒளிபுள்ளி வடிவமான சிவனும் அவரிடமிருந்தான ஒளியையும் காட்டும் மேல் பகுதியும் மனித வடிவிலிருக்கும் தன் குழந்தைகளோடு பேசி வழிகாட்டுவதற்காக ஒரு மனித சரீர ஆதாரத்தை எடுத்ததை விளக்குவதாக கீழே வட்டமான பகுதியையும் அமைத்துள்ளனர்.சிவனின் வழிகாட்டல் எனும் ஞானத்தை தான் எடுத்த சரீரத்தினுாடகவே தருகின்றார் என்பதையே கீழ் பகுதியிலிருந்தே அமிர்தம் பெறுவதாக காட்டுகிறார்கள்.
3. இராத்திரியில் வழிபாடு:
மனித ஆத்மாக்கள் தெய்வீகக் குணங்களைக் கொண்டவர்கள். ஆனால் பலவீனப்பட்டதால்தான் விவேகமற்றவராகி அறியாமைக்குட்பட்டு தவறான குணங்களான காமம் கோபம் பற்று போராசை அகங்காரம் எனும் பஞ்ச விகாரங்களின் ஆதிக்கத்தினால் தாமே செய்த பாவங்களால் தாமே துன்பத்தை அனுபவிக்கின்றனர். இத்தகைய அறியாமை எனும் இருளான
மனித நிலையைப் போக்க அவதரித்தமையையே பௌதீக இரவில் வருவதாக அதே மனிதரே காட்டுகின்றனர்.
4. கண் விழித்து விரதம் அனுட்டித்தல்:
அறிவுக்கண்ணை விழிப்படைய வைக்க சிவன் வந்ததை பின் தம் விளக்கத்தின் அடிப்படையில் பௌதீகக் கண் விழிப்பதாக ஏற்படுத்தி செய்கின்றனர். ஆனாலும் தம் இறைவனைச் சந்தித்த பதிவு காண்போம் என்ற திடசங்கற்பமே அவர்களது விரதம் குறிக்கிறது.
ஆனால் இவ்வளவும் சந்தித்த பதிவின் வெளிப்பாடே தவிர அவரைக் காணவைக்கும் வழியல்ல. பௌதீகக் கண்களால் காணமுடியாதவர். தற்போது அவர் வந்து பிரம்மாவின் சரீர ஆதாரத்தை எடுத்து தன்னை அறிவிப்பதுடன் தன் குழந்தைகளின் மாற்றத்திற்காக வழிகாட்டும் ஞானத்தையும் கொடுத்துக் கொண்டிருக்கின்றார். ஏனெனில் இதுவே வாழ்க்கை எனும் சக்கரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் சக்கரத்தின் இறுதிவேளையான கலியுகத்தின் இறுதியாகும்.
5. காலமும் கடவுளும்:
கடந்த பல பிறவிகளாக துன்பத்தை அனுபவித்தாலும் கடவுள் வரும்வரை தமக்கு தெரிந்த வழிகளில் முயற்சி செய்தது நியாயமானது. ஆனால் பழைய உலகம் முடிவுக்கு வரவேண்டிய இந்த நேரம் படைப்பவரான கடவுள் வரவேண்டும். ஆகவே வழிகாட்ட வந்துவிட்டார். ஆகவே காலத்தின்படி கடவுளிடம் கற்று ஞானோதயம் பெறவேண்டிய நேரம் பொம்மைகளோடு விளையாடும்
குழந்தைகளாக பக்தியின் சம்பிரதாயங்களோடு விளையாடிக்கொண்டிருக்கலாமா?
சிந்தித்து செயற்படுபவனே மனிதன் அறியாமை போக்குவதற்கே ஆண்டவனின் ஞானம் மட்டுமல்ல சக்தி பெற யோகத்தையும் கற்பிக்கின்றார்.
6. பிரம்ம குமாரிகள் உலகஆன்மீகப் பல்கலைக் கழகம்
ஒவ்வொரு கல்பத்திலும் இறுதியில் மட்டுமே இயங்கும் இந்த இறை பல்கலைக்கழகம் மூலம் இறைவன் தற்போது உலகெங்குமுள்ள குழந்தைகளுக்காக ஆன்மீக சேவையைச் செய்து கொண்டிருக்கின்றார். அதாவது 5000 வருட சக்கரத்தில் இறுதி 100 வருடங்கள் மட்டுமே கடவுளின் காலம் ஆகும்.அதுவும் கூட முடிவுக்கு வரும் இவ்வேளையிலும்
விழிப்படையாத சிவராத்திரியா? சிந்தித்து எம்மைச் சீரமைப்போமா?
திருமதி. ஞானா. தனபாலசுந்தரம்
பிரம்ம குமாரிகள் உலக ஆன்மீக பல்கலைக்கழகம்