Ontario Premier urges Canadian Prime Minister
ஒன்றாரியோ மாகாணத்திற்கு கனடிய மத்திய அரசு வழங்கும் சுகாதார சேவைகளுக்கான நிதி சார்ந்த ஐந்தாண்டு திட்டத்தை நிறுவுங்கள்
கனடிய பிரதமருக்கு ஒன்றாரியோ முதல்வர் கடிதம் மூலம் வேண்டுகோள்
ஒன்ராறியோ மாகாணத்திற்கு கனடாவின் மத்திய அரசு வழங்கும் சுகாதா சேவைகளுக்கான நிதி தொடர்பாக அதன் நிலைத்தன்மையையும் உறுதியையும் நிரந்தரமான திட்டத்தின் கீழ் கொண்டுவர எமது அரசு விரும்புகின்றது, இது சுகாதார சேவை சார்ந்த பயன்பாடுகளை மேம்படுத்துவதில் எங்களின் தற்போதைய பணிக்கு பலமானதாக இருக்கும் . இதன் மூலம் இப்போதும் எதிர்காலத்திலும் ஒன்றாரியோ வாழ் மக்களின் தேவைகளை எங்கள் சுகாதாரப் பாதுகாப்பு திட்டத்தின் வாயிலாக பூர்த்தி செய்ய முடியும் என்பதை உறுதிசெய்வதற்கு நாங்கள் விரைவில் ஒரு உடன்பாட்டுக்கு வருவோம் என்று நான் நம்புகிறேன். ஒன்ராறியோ மக்கள் உட்பட அனைத்து கனேடியர்களும் இதைஅவசியம் செய்து முடிக்க வேண்டும் என்று நம்புகிறார்கள்.
இவ்வாறு ஒன்றாரியோ மாகாண முதல்வர் டக் போர்ட் அவர்கள் கனடிய பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கடிதத்தில் அவர் மேலும் தெரிவிக்கையில்.
உறுதியை வழங்குவதற்கும் நீண்ட கால நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கும், பின்வரும் மறுஆய்வு செயல்முறைகளை மூலம் மத்திய அரசு தனது திட்டத்தை திருத்த வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
ஏற்கனவே அமலில் உள்ள சுகாதார ஒப்பந்தங்களின் மதிப்பாய்வை நிறுவும் அதே வேளையில்
கனடாவின் மத்திய அரசு வழங்கும் சுகாதா சேவைகளுக்கான நிதி தொடர்பான திட்டத்தின் ஐந்தாண்டு மதிப்பாய்வை உடனடியாக நிறுவவும் எனவும் கேட்டுக்கொள்கின்றேன் என்றும் எழுதியுள்ளார்.
மேற்படி கடிதத்தின் ஆங்கில மூலம் இங்கே காணப்படுகின்றது