ரொறன்ரோ மாநகர மேயராகப் பணியாற்றிய ஜோன் ரோரி தனது அலுவலகத்தை விட்டு வெள்ளிக்கிழமை மாலை நிரந்தரமாக விலகுகின்றார்.
ரொறன்ரோ மாநகர மேயராகப் பணியாற்றிய ஜோன்டோரி நேற்று முன்திினம் புதன்கிழமை மாலை தனது ராஜினாமா கடிதத்தை நகர எழுதுநரிடம் ( City Clerk ) சமர்ப்பித்தார். தான் பதவி விலகுவதாக அறிவித்த நாளிலிருந்து தொடர்ச்சியாக பல நெருக்கடிகள் நிலவி வந்த நிலையில் கனடாவின் தேசிய ஊடகங்கள் கொடுத்த அழுத்ததங்கள் காரணமாக , இன்று 17 ம் திகதி வெள்ளிக்கிழமையன்று மாலை 5 மணிக்கு மேயர் அலுவலகத்தை விட்டு அவர் வெளியேறுவார் என்பது உறுதியளிக்கப்பட்டுள்ளது.
ஜோன் ரோரிி அவர்களின் விலகலுக்குப் பின்னர் துணை மேயர் பதவியை வகிக்கவுள்ள ஜெனிபர் மெக்கெல்வி மேயரின் ஆசனத்தை அலங்கரிப்பார் என்றும் அவரது சில பொறுப்புகளை எடுத்துக்கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
தனது இராஜினாமாக் கடிதத்தை கையளித்த பின்னர் ஜோன் ரொரி ஊடகவியலாளர்களிடம் பேசிய போத து “2014 முதல் மேயராக தேர்ந்தெடுத்து என் மீ;து நம்பிக்கை வைத்திருந்த ரொறன்ரோ மக்களுக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். நான் தொடர்ந்தும் எனது பதவி விலகல் பற்றி மிகவும் வருந்துகிறேன் மற்றும் ரொறன்ரோ மக்களிடமும் மற்றும் எனது செயல்களால் பாதிக்கப்பட்ட அனைவரிடமும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கிறேன்,” என்றார் ஜோன் ரொரி.
அவர் தொடர்ந்து பேசுகையில்
“எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக இந்த அற்புதமான நகரத்தின் மக்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பைப் பெற்றதால் நான் மிகவும் மதிக்கப்படுகிறேன். நான் உண்மையிலேயே நேசிக்கும் நகரத்திற்கு சில நன்மைகளை பெற்றுக் கொடுத்துள்ளேன் என்று பூரணமாக நம்புகிறேன்.”
இவரது இராஜினாமா தொடர்பாக கருத்து வெளியிட்ட நகர எழுதுநர்- City Clerk – அலுவலகம் பின்வருமாறு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது
“மேயரின் ராஜினாமாவால் பெரிதான பாதிப்புபுக்கள் எதுவும் இல்லை. மற்றும் குழுக்கள் அல்லது பிற அமைப்புகளுக்கான செயற்பாடுகளையும் இது பாதிக்காது. இன்றுவரை ஜோன் ரோரியினால் எடுக்கப்பட்ட அனைத்து முடிவுகளும் நடைமுறையில் இருக்கும்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ரொறன்ரோ நகர சட்டத்தின்படி, அடுத்த மேயரை தேர்வு செய்ய இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
எதிர்வரும் மார்ச் 29-ம் தேதி நடைபெற உள்ள மாநகர சபையின் அடுத்த கூட்டத்தின் போது மேயர் அலுவலகம் காலியாக உள்ளதாக அங்கத்தவர்களுக்கு அறிவிக்கப்பெற்று இடைத்தேர்தலுக்கான அழைப்பு விடுக்கப்படும்.
வேட்பாளர்கள் எப்போது வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்பதற்கான காலக்கெடுவை எழுதுர் நிர்ணயிப்பார். முனிசிபல் தேர்தல் சட்டத்தின்படி, வேட்புமனு தாக்கல் முடிந்து 45 நாட்களுக்குப் பிறகு தேர்தல் நாள் நடைபெறும்.
கடந்த வெள்ளிக்கிழமை, ஜொன் ரோரி கடைசி நிமிட செய்தி மாநாட்டின் போது மேயர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார், அங்கு அவர் தொற்றுநோய்களின் தாக்கம் தீவிரமாக இருந்த போது தனது அலுவலகத்தில் பணியாற்றிய ஒரு பெண் ஊழியருடன் தான் கொண்டிருந்த அனுமதிக்கப்படாத உறவின் தாக்கங்களை அவர் வெளிப்படுத்தினார்.
“நான் மேயராகவும் குடும்ப மனிதராகவும் பேண வேண்டிய தரத்தை பூர்த்தி செய்யாத” உறவுதான் அது. ஆனால் தற்பொழுது அது முடிவுக்கு வந்துள்ளது. எனவே நான் பதவியை விட்டு விலக தீர்மானித்துள்ளேன்’என்றார்.
“நான் மிகவும் நேசித்த ஒரு மாபெரும் நகரத்தில், நான் விரும்பும் ஒரு பதவியை விட்டு விலகியதற்கு நான் மிகவும் வருந்துகிறேன், என் இதயத்திற்கு ஒரு தாக்கமாக இருக்கும் என்பது எனக்கு தெரியும் நம்புகிறேன்,’ என்றும் கவலையும் தெரிவித்தார் பதவி விலகிச் செல்லும் ஜோன் ரோரி