ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கேப்டன்ஷிப்பில் சிறு மாற்றத்தை பிசிசிஐ செய்துள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 4 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் மற்றும் 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.தற்போது 2 டெஸ்ட் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இரண்டிலும் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி தொடரில் 4-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 3ஆவது டெஸ்ட் போட்டி மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் மைதானத்தில் மார்ச் 1ஆம் தேதி தொடங்கி 5ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இறுதி டெஸ்ட் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் மார்ச் 9ஆம் தேதி தொடங்கி 13ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதையடுத்து 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் மார்ச் 17, 19 மற்றும் 22 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள வீரர்கள் பின்வருமாறு- ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், கே.எல். ராகுல், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா (துணை கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், முகமது. ஷமி, முகமது. சிராஜ், உம்ரான் மாலிக், ஷர்துல் தாக்கூர், அக்சர் படேல், ஜெய்தேவ் உனத்கட்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், தனிப்பட்ட அலுவல் காரணமாக ரோஹித் சர்மா பங்கேற்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக முதல் போட்டிக்கு மட்டும் ஹர்திக் பாண்ட்யா இந்திய அணிக்கு தலைமை தாங்குகிறார். இதேபோன்று இந்தூர் மற்றும் அகமதாபாத் டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல், ஷுப்மான் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, கே.எஸ். பரத் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது. ஷமி, முகமது. சிராஜ், ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனத்கட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.