தென் ஆப்ரிக்காவில் நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று நடைபெறும் முதலாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. கடந்த 2020 ஆம் ஆண்டு மெல்பர்னில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், ஆஸ்திரேலியா அணி 85 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது.
இதுவரை நடைபெற்ற 7 உலகக் கோப்பைகளில், 5 முறை வென்று ஆஸ்திரேலியா அணி வலுவான நிலையில் உள்ளது. மேலும், இந்தியாவுக்கு எதிரான கடைசி 11 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
எனினும் நடப்புத் தொடரில், 3 போட்டிகளில் வென்று இந்திய அணியும் வலுவாகவே உள்ளது. குறிப்பாக தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா சிறப்பாக விளையாடி வருகிறார். அவருக்கு ஷாபாலி வர்மா, கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் உள்ளிட்டோர் கைகொடுக்க வேண்டும் என்பதே இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
நாளை நடைபெறும் இரண்டாவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியும் தென்னாப்பிரிக்கா அணியும் மோதுகின்றன. இந்த போட்டிகளில் வெற்றி பெறும் அணிகள், வரும் ஞாயிறு (26/02/2023) அன்று கேப்டவுனில் உள்ள நியூலாண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இறுதி போட்டியில் களமிறங்கும்.