ஜெகதீஸ்வரன் பிரஷாந்த்
முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி ஆதார வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தர்களும் இன்றைய தினம் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்
நியாயமற்ற உயர் வங்கி வட்டி வீதத்தை குறைத்தல்
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப்பணிப்பாளர் ருசான் பெல்லானாவை தேசிய விஹ்த்திய சாலையிலிருந்து விலக்குதல்
அனைத்து ஊழியர்களுக்கும் பணவீக்கம் மற்றும் போக்குவரத்து கொடுப்பனவுகளை பெறுதல்
அதிகரித்த மின்கட்டணத்தை குறைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து குறித்த போராட்டம் நாடளாவிய ரீதியில் இன்று இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது
இதேவேளை மல்லாவி ஆதார் வைத்தியசாலையில் பண்டுவம் பெரும் நோக்கில் வருகை தந்த நோயாளிகள் பலர் திரும்பி செல்லும் நிலை காணப்பட்டது