ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கே.எல்.ராகுல் ரன் குவிக்க தடுமாறி வருகிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகளின் 3 இன்னிங்ஸில் பேட்டிங் செய்துள்ள கே.எல்.ராகுல் 20, 17, 1 ஆகிய சொற்ப ரன்களில் நடையை கட்டினார். சமீபகாலமாக கே.எல்.ராகுல் டெஸ்ட் கிரிக்கெட்டில் பெரிய ரன்களை குவிக்கவில்லை.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 30 ரன்களை கடக்கவே தடுமாறிக் கொண்டிருக்கிறார். கடைசியாக 2022 ஜனவரியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஜோகன்ஸ்பெர்க் போட்டியில் ஒரு அரைசதம் அடித்துள்ளார். அதன்பின்னர் அவர் ஆடிய 11இன்னிங்ஸ்களில் 30 ரன்களை கூட தாண்டவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் கே.எல்.ராகுல் தொடர்ந்து சொதப்பி வருவதால் அவரை அணியில் இருந்து நீக்கிவிடுங்கள் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
பென்சில் உட்கார வைக்கப்பட்டிருக்கும் சுப்மான் கில், சூர்யகுமார் யாதவ் போன்றவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கே.எல்.ராகுலுக்கு ஆதரவாக கவுதம் கம்பீர் பேசியுள்ளார். கே.எல்.ராகுல் குறித்து பேசுபவர்களுக்கு சர்வதேச கிரிக்கெட் போட்டி எவ்வளவு கடினமானது எனத் தெரியாது. ஒரு வீரர் சரியாக விளையாடவில்லை என்றால் அவருக்கு அதிக ஆதரவு தேவை என்றுநான் நம்புகிறேன்.
கிரிக்கெட் விளையாட ஆரம்பித்ததில் இருந்து கடைசிவரை ரன்களை குவித்த ஒரு வீரர் பெயரை சொல்லுங்கள் பார்ப்போம். எல்லா வீரர்களுக்கும் இதுபோன்ற காலக்கட்டம் வரும் அப்போது நாம் அவருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். ரோஹித் ஷர்மா கிரிக்கெட் கெரியரை தொடங்கும்போது தடுமாறினார். ஆனால் இப்போது சிறப்பாக விளையாடி வருகிறார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சீரியஸ்-க்கு நடுவில் இப்படி பேசுவது தேவையில்லாதது. இப்போது இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. ஒரு வீரர் ரன்களை குவிக்கிறாரா இல்லையா என்பது ட்ரெஸிங் ரூமில் தெரியும். மீடியாவோ முன்னாள் கிரிக்கெட் வீரர்களோ ஒரு வீரர் செயல்பாடுகளை பற்றி பேசுவது நல்லது இல்லை. கே.எல்.ராகுல் கொஞ்சம் தனியா விடுங்க அவர் நல்ல வீரர் என நமக்கு தெரியும்.” எனக் கூறியுள்ளார்.