(25-02-2023)
‘வாழும் போதே வாழ்த்துவோம்’ தேசிய ரீதியில் 25 மாவட்டங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட கலைஞர்களுக்கும் கலாச்சாரத்தை மேம்படுத்த உழைத்தவர்களுக்குமான நான்காவது தேசிய கலா விபூஷணம் ‘உலகத் தமிழர் விருது வழங்கும் விழா’ இன்று(25) மன்னார் பிரதேச செயலகப் பிரிவு பேசாலை சங்கவி பட மாளிகையில் காலை 11 மணிக்கு ஆரம்பமாகி இடம் பெற்றது.
இதில் 25 மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட கலைஞர்கள் மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்த உழைத்தவர்கள் 180 கலைத்துறை சார்ந்தவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இதேவேளை சிறப்பான முறையில் கலையை முன்னெடுத்துச் செல்லும் நபர்களுக்கும் நடிகர்கள் மற்றும் பாடல் கலைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த கலைஞர்களுக்கும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டதும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.
குறித்த விழாவை கலாநிதி துரைராசா சுரேஷ் சங்கவி பிலிம்ஸ் சங்கவி தியேட்டர் உரிமையாளர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக புனித வெற்றி நாயகி ஆலயம் பேசாலை பங்குத் தந்தையும் மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவருமான வணக்கத்திற்குரிய ஏ ஞானப்பிரகாசம் அடிகளார்,புரவலர் ஹாசிம் உமர்,உட்பட மதத் தலைவர்கள் கலந்து கொண்டு விருதுகளையும் கௌரவத்தையும் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.
இதில் கலைஞர்கள், கலாச்சாரத்தை மேம்படுத்த உழைத்தவர்கள் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.நிகழ்வில் தமிழர் பாரம்பரிய நாட்டியம் மற்றும் நாட்டுக்கூத்து சிறப்பு நிகழ்வுகளாக இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது