ஆஸ்திரேலியாவில் நடந்த உள்ளூர் போட்டியின்போது ஒரே ஓவரில் 5 விக்கெட்டுகள் விழுந்தன. இதுதொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது. ஆஸ்திரேலியாவில் மகளிருக்கான தேசிய கிரிக்கெட் போட்டி தற்போது நடத்தப்படுகிறது. 50 ஓவர்களைக் கொண்டதாக இரவு பகல் ஆட்டமாக இந்த போட்டிகள் நடக்கின்றன.
இதில் டாஸ்மேனியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலிய அணிகள் சமீபத்தில் மோதின. முதலில் பேட் செய்த டாஸ்மேனியா அணி 260 ரன்கள் எடுத்தது. அடுத்ததாக தெற்கு ஆஸ்திரேலிய அணி விளையாடியபோது மழை குறுக்கிட்டதால், 47 ஓவரில் 243 ரன்கள் எடுக்க வேண்டும் என்று புதிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 46 ஆவது ஓவரின்போது தெற்கு ஆஸ்திரேலிய அணி 5விக்கெட்டுகளைஇழந்து 239 ரன்கள் எடுத்திருந்தது. 47 ஆவது மற்றும் கடைசி ஓவரை டாஸ்மேனியா அணியின் கோய்ட்டே வீசினார். இந்த ஓவரில் தெற்கு ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற 4 ரன்கள் தேவையாக இருந்தது.
Here’s the final over of the WNCL Final. South Australia start it needing four runs with five wickets in hand, and Tasmania win by a run after bowling SA out. Unreal scenes #WNCLFinal pic.twitter.com/c0n4x07YrX
— Ricky Mangidis (@rickm18) February 25, 2023
முதல் பந்தில் தெற்கு ஆஸ்திரேலிய அணியின் அனீ நீல் 28 ரன்கள் எடுததிருந்தபோது போல்டாகி வெளியேறினார். 2 ஆவது பந்தில் 1 ரன் எடுக்கப்பட்டது. 3 ஆவது பந்தை எதிர்கொண்ட சவுத் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஜெம்மா பார்ஸ்பி 28 ரன்கள் எடுத்திருந்தபோது ஸ்டெம்பிங் முறையில் அவுட் ஆனார். 4 ஆவது பந்தில் மேலும் ஒரு ரன் அவுட் ஆனது. இதையடுத்து 2 பந்தில் 3 ரன் எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. 5 ஆவது பந்தில் வில்சன் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழக்க, கடைசி பந்தில் மேலும் ஒரு ரன் அவுட் நிகழ்ந்தது. இதன் மூலம் 1 ரன் வித்தியாசத்தில் டாஸ்மேனியா அணி தெற்கு ஆஸ்திரேலியாவை வென்றது.