(மன்னார் நிருபர்)
(27-02-2023)
மன்/அல் அஸ்ஹர் தேசிய பாடசாலையின் 125 வது ஆண்டு நிறைவை ஒட்டி பாடசாலையின் பழைய மாணவர்கள் சங்கத்தினால் (PPA) ஏற்பாடு செய்யப்பட்ட பழைய மாணவர்களுக்கான கிரிக்கெட் மென்பந்து சுற்றுப்போட்டி நிகழ்வு கடந்த வெள்ளி,சனி,ஞாயிறு ஆகிய மூன்று தினங்கள் பாடசாலையின் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
குறித்த சுற்று போட்டியில் பழைய மாணவர்களை கொண்ட 24 அணிகள் கலந்து கொண்டனர்.
இறுதி சுற்று போட்டியானது நேற்று ஞாயிற்றுக்கிழமை(27) மாலை பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது. குறித்த சுற்றுப்போட்டியில் 2003 O/L அணியினரும் 2018 O/L அணியினரும் தெரிவு செய்யப்பட்டு போட்டி இடம்பெற்றது.
இதன்போது 2018 O/L அணியினர் 78 ஓட்டங்களை பெற்று முதலிடம் பெற்றனர்.
இந்த நிலையில் 2018 O/L அணியினர் முதல் இடத்தையும், 2003 O/L அணியினர் 2 ஆம் இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.
இந்த நிலையில் 2018 O/L அணியினர் வெற்றிக்கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டனர்.
இறுதி பரிசளிப்பு நிகழ்வு பாடசாலையின் அதிபர் என்.எம்.மாஹிர் தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது விருந்தினர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்களை கௌரவித்த தொடு வெற்றிக்கின்னங்களையுத் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.