(மன்னார் நிருபர்)
(28-02-2023)
இலக்கு கிராம மக்களுக்கும், இயற்கை வள திணைக்களங்களுக்கும் இடையிலான உறவை மேம்படுத்தும் நோக்குடன் பொது கலந்துரையாடல் இன்று செவ்வாய்க்கிழமை (28) காலை மன்னார் வாழ்வோதயம் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடல் மன்னார் வாழ்வோதயத்தின் ஏற்பாட்டில், நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் எஸ்.ஜேசுதாசன் தலைமையில் இடம்பெற்றது.
-இதன் போது இலக்கு கிராமங்களான மடு றோட்,சௌத்பார்,கீரி,வேப்பங்குளம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இந்நிகழ்வில் நீர் வழங்கல் வடிகாலமைப்பு அதிகார சபை, சுற்றுச்சூழல் அதிகார சபை,வனவிலங்கு திணைக்களம், காட்டு இலாகா ஆகியவற்றின் அதிகாரிகள், கிராமங்களின் சூழல் பாதுகாப்புக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
திணைக்களங்களின் அதிகாரிகள் தமது சேவைகள் பற்றியும், சந்திக்கும் சூழல் பாதுகாப்பு சவால்கள் பற்றியும் விளக்கமளித்தனர்.
. மேலதிக விளக்கங்களை மக்கள் கேட்டுத் தெரிந்து கொண்டார்கள்.
திணைக்கள அதிகாரிகளும், மக்களும் இந்த உறவுப்பால ஏற்பாட்டிற்காக கறிராஸ் வாழ்வுதயத்திற்கு தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்கள்.
மக்களை நேரடியாக சந்திக்கவும், கலந்துரையாடல்கள் ஊடாக அவர்களுக்கு தெளிவூட்டல் களை வழங்கவும்,அவர்களுடன் நெருங்கி அறிமுகத்தினை ஏற்படுத்த சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டது.
இதன் போது கலந்து கொண்ட மக்கள் கருத்து தெரிவிக்கையில்,
வனவிலங்கு திணைக்களம், சுற்றுச்சூழல் அதிகார சபை என்பவற்றின் அதிகாரிகளை நேரடியாகச் சந்திப்பதற்கான வாய்ப்பு கிடை த்ததுடன், அவர்கள் மூலம் அந்தத் திணைக்களங்களின் சேவைகள் பற்றிய தெளிவான அறிவைப் பெற்றுக் கொண்டோம்.
உருவாகியுள்ள தொடர்பினையும், உறவினையும் கொண்டு நமது சூழலை தாமே பாதுகாத்துக் கொள்ளும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாகக் கூறினார்கள்.