சர்வதேச பந்துவீச்சாளருக்கான டெஸ்ட் தரவரிசையில் இந்திய வீரர் ரவிச்சந்திர அஸ்வின் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஆஸ்திரேலிய அணி 4 போட்டிகள் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் அஸ்வின் பந்து வீச்சினை எதிர்கொள்ள முடியாமல் ஆஸ்திரேலிய அணி தடுமாறி வருகிறது. டெல்லியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தியாவின் இரண்டாவது டெஸ்ட் வெற்றியின் போது அஸ்வின் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணியை மிரட்டி வருகிறார்.
இந்த நிலையில் வெலிங்டனில் நியூசிலாந்திடம் இங்கிலாந்து ஒரு ரன் வித்தியாசத்தில் தோற்றதால் ஆண்டர்சன் இரண்டாவது இடத்திற்கு சரிந்ததை அடுத்து அஸ்வின் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். அஸ்வின், 864 புள்ளிகளுடன் முதல் இடத்தினை எட்டியுள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில், இங்கிலாந்து அணியின் ஜேம்ஸ் ஆண்டர்சன் 859 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். மூன்றாவது இடத்தில் ஆஸ்திரேலிய அணியின் பேட் கம்மின்ஸ் 558 புள்ளிகளுடன் உள்ளார்.
👑 A new No.1 👑
India’s star spinner has replaced James Anderson at the top of the @MRFWorldwide ICC Men’s Test Bowling Rankings 👏
Details 👇https://t.co/sUXyBrb71k
— ICC (@ICC) March 1, 2023
இதற்கிடையில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, முதுகுப் பிரச்சினை காரணமாக 2022 ஆகஸ்ட் 2022 முதல் விளையாடாத நிலையிலும் நான்காவது இடத்திற்கு உயர்ந்துள்ளார். மேலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய ஆல்ரவுண்டர் ஜடேஜா 10 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் 8வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.