ஜெகதீஸ்வரன் பிரஷாந்த்
முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அமைக்கப்பட்ட சிறுநீரக நோயாளர்களுக்காக குருதிமாற்றும் சிகிச்சை நிலையம் கனடாவில் வசிக்கும் செந்தில்குமரன் நிவாரண நிதியத்தின் ஊடாக 36 இலட்சம் ரூபாசெலவில் அமைக்கப்பட்ட சிறுநீரக நோயாளர்களுக்கான இரத்த சுத்திகரிப்பு நிலைய திறப்பு நிகழ்வு முல்லைத்தீவு பிராந்தியசுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் உமாசங்கர் தலைமையில் நடைபெற்றுள்ளது
இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக திரு திருமதி செந்தில்குமரன், மாவட்ட மருத்துவமனை பணிப்பாளர் மருத்துவர் வாசுதேவ்,சிறுநீரக வைத்திய நிபுணர் வைத்தியர் பவானந்தன், மற்றும் வைத்தியர்கள் வைத்தியசாலை ஊழியர்கள்,கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் மற்றும் சிறுநீரக சிகிச்சை பெறும் நோயளர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து சிறப்பித்துள்ளார்கள்.
முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் தற்போது 5 இரத்த சுத்திகரிப்பு இயந்திரங்கள் காணப்படுகின்றன
அவற்றை சரியான முறையில் இயங்குவதற்கான வசதிவாய்ப்புக்களுடனான இராத்த சுத்திகரிப்பு நிலையம் செந்தில்குமாரன் நிவாரண நிதியத்தின் நிதி உதவியில் அமைக்கப்பட்டு கட்டத்திற்கு ரொறன்டோ முல்லை இரத்தசுத்திகரிப்பு நிலையம் என்ற பெயர் பலகையினை சிறுநீரக நோயாளியான இளைஞன் ஒருவர் திரைநீக்கம் செய்துவைக்க சிகிச்சை நிலையத்தினை மூன்று மாவீரர்களின் தாயாரான இரத்தினம் திரவியம்மா நாடாவை வெட்டி திறந்துவைத்தார்
தொடர்ந்து இரத்தசுத்திகரிப்பு நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கிவைக்கப்பட்டதை தொடர்ந்து மாவட்ட வைத்தியசாலை பொது மண்டபத்தில் கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றுள்ளது.
இதன்போது செந்தில்குமரன் அவர்களினால் கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் சோன்சென் அவர்களின் சிறுநீராக சுத்திகரிப்பு நிலையத்தித்திற்கான வாழ்த்து சான்றிதழ் வழங்கிவைக்கப்பட்டது
தொடர்ந்து மாவட்ட மருத்துவமனைக்கு அரும்பெரும் சொத்தாக சிறுநீராக குருதிமாற்று சிகிச்சை நிலையத்தினை வழங்கிய திரு.திருமதி செந்தில்குமரன் அவர்களுக்கு மருத்துவமனை நோயாளர் நலன்புரி சங்கத்தினரால் பொன்னாடை போர்த்தி மதிப்பளிக்கப்பட்டுள்ளதுடன் நினைவு சின்னமும் வழங்கிவைக்கப்பட்டது
நிகழ்வில் வைத்தியர்கள், தாதியர்கள், பயனாளிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்