வி.தேவராஜ்
மூத்த ஊடகவியலாளர்.
- சுதந்திர இலங்கையின் ஜனநாயக மாயையை தோலுரித்துக் காட்டியவர்கள் தமிழர்களே
- தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாiஷகளை மறுதளித்துக் கொண்டு ‘ஜனநாயக பயணத்தில் தென்னிலங்கை .
சுதந்திர இலங்கையில் ஜனநாயகத்தை இழந்த தமிழ் மக்கள் கடந்த 75 வருடங்களாக தமது சுதந்திரத்துக்காக போராடி வருகின்றனர். 75 வருடங்களாக தென்னிலங்கையின் ஆளும் வர்க்கம் தமிழ் மக்களின் அரசியல் அபிலாiஷகளை கொடூரமாக மிலேச்சத்தனமாக அடக்கி ஒடுக்கி வருகின்றது. தென்னிலங்கையின் ஆளும் வர்க்கம் ஆட்சி அதிகாரத்துக்காகப் பிரிந்து நின்று போராடியபோதும் தமிழர் விவகாரத்தில் சமரசத்துக்கு இடமில்லை என்ற நிலைப்பாட்டை இன்றுவரை மிக இறுக்கமாககடைப்பிடித்துவருகின்றது.
- இனவாத போதைக்குள் இன்றும் தென்னிலங்கை
தென்னிலங்கையின் ஆளும் வர்க்கத்தின் தமிழ் மக்களுக்கெதிரான இந்த கொள்கையினையும் கோட்பாட்டினையும் தென்னிலங்கை மக்களும் தொடர்ந்தும் இன்றுவரை ஆதரித்தே வருகின்றனர்.
தென்னிலங்கையின் ஆளும் வர்க்கத்தின் இனவாத முலாம் பூசப்பட்ட கோட்பாட்டுக்குள் மூழ்கிக் கிடக்கும் தென்னிலங்கை இனவாத போதைக்குள் இருந்து விடுபட இன்றைய நிலையிலும் தயாராக இல்லை.
ஆனால் இனவிவகாரத்திற்கான தீர்வின்றி நாடு மூச்சுவிடுவதற்கே வழியில்லை என்ற நிலையிலும் தென்னிலங்கை இனவாதப் போதைக்குள் மூழ்கிக் கிடக்கின்றது.
- தென்னிலங்கை தேடும் நிரந்தரத் தீர்வு சாத்தியமில்லை!
தற்போதைய நிலையில் தென்னிலங்கை புள்ளடி போட்டு முகங்களை மாற்றினாலும் நாடு எதிர் கொண்டுள்ள பாரிய பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைப்பதாக அமையாது. வேண்டுமானால் மூச்சுவிட அவகாசம் கிடைக்கலாம்.இதற்கு மேல் நிரந்தரத் தீர்வுக்கு வழி வகுப்பதாக அமையாது.
துட்டகமுனுவிடம் ஏன் முடங்கிப் படுத்திருக்கின்றாய் என்று அவருடைய தாய் விகாரமகாதேவி வினவுகின்றாள்.அதற்குப் பதில் அளித்த துட்டகமுனு வடக்கே தமிழர்கள் தெற்கே கடல்.எவ்வாறு நீட்டி நிமிர்த்தி படுப்பது என்று கூறியதாக மகாவம்சம் குறிப்பிடுகின்றது. இந்தப் பரம்பரையில் வந்த படைச் சிப்பாய் இன்று புத்தர் கனவில் வந்து யாழ் நிலாவரையில் புத்தர் சிலையை வைக்கக் கூறியதாக கூறுகின்றார்.
எனவே ஒரு புறம் தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாiஷகளை மறுதளித்துக் கொண்டு மறுபுறம் தென்னிலங்கை தமது அரசியல் அபிலாiஷகுறித்தும் தமக்கான ஜனநாயகம் குறித்தும் உரத்துப் பேசிக் கொண்டிருக்கின்றது.
அந்தவகையில் தென்னிலங்கையில்; ஜனநாயகம் குறித்த கலந்துரையாடல்கள் இன்று பெரிய அளவில் இடம்பெற்று வருகின்றன. ஆங்கில சிங்கள ஊடகங்களில் மாத்திரமல்ல பொது வெளியிலும் ‘தென்னிலங்கையின் ஜனநாயகம்‘ பேசு பொருளாக உள்ளது.
கடந்த 75 வருடங்களாக ஜனநாயகம் அற்ற நாட்டில் திறந்த வெளிச் சிறைச்சாலை கைதிகளாக வாழ்வதாக தமிழ் மக்கள் எழுப்பி வருகின்ற குரலை இன்று அதாவது 75 வருடங்களுக்குப் பிறகு தென்னிலங்கையில் முதன்முதலாகக் கேட்கக் கூடியதாக இருக்கின்றது.
கடந்த 75 வருடங்களாக ஜனநாயகம் அற்ற ‘ஜனநாயக நாட்டில்‘; வாழ்ந்து வருகின்றோம் என்று தென்னிலங்கை தற்போது வெளிப்படையாகவே
புலம்புகின்றது.
- ஜனநாயகத்திற்கு பிரியாவிடை யா?
ஜனநாயகத்திற்கு பிரியாவிடை அளிக்கப்படுகின்றதா? என்று கேள்வி எழுப்பும் தென்னிலங்கை இலங்கையில் ஜனநாயகம் கூட்டுப் பலாத்காரத்திற்கு ஆளாகியுள்ளதாகவும் அராஜகத்தின் மூலம் ஜனநாயகம் கற்பழிக்கப்படுவதாகவும் விசனம் தெரிவிக்கின்றனர்.
- ‘நாம் சபிக்கப்பட்டவர்களா?’
இலங்கையில் இன்றைய காலகட்டத்தில் வாழ்பவர்கள் சபிக்கப்பட்டவர்களா என்றும் கேள்வி எழுப்பும் தென்னிலங்கை தாம் பாவப்பட்ட மக்களாகவே வாழ்வதாகவும் தெரிவிக்கின்றனர். ஏனென்றால் எதிலும் எங்கும் தமக்கு மன அமைதி கிடைப்பதில்லை.
நாட்டின் சாதாரண குடிமக்களுக்கு எதிராகவே அனைத்து செயற்பாடுகளும் உள்ளன. உணவு, எரிபொருள், மின்சாரம், தண்ணீர், போக்குவரத்து, சுகாதாரம், கல்வி போன்ற அத்தியாவசியமான வாழ்க்கைத் தேவைகளின் விலைகள் எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் உயர்ந்து கொண்டே செல்கிறது.
பொதுவெளியில் போஸ்டர் பிடித்து கருத்துகளை தெரிவிக்க முடியாது.
எங்களின் அகிம்சை போராட்டங்கள் பாசிச மற்றும் பயங்கரவாதம் என்று
முத்திரை குத்தப்பட்டுஇ நாங்கள் தண்ணீர் பீரங்கிகளினாலும் இ கண்ணீர் புகைக் குண்டுகளினாலும்இ தடியடிகளுடன்; மற்றும் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுகின்றோம்.
- நாஜி வதை முகாமா?
- இலங்கை என்றால் என்ன? இது ஒரு நாஜி வதை முகாமா?என்று கேள்வி எழுப்பும் தென்னிலங்கை தற்போது மக்களுக்கும்இ மக்களின் அங்கீகாரம் இல்லாத முரட்டு அரசுக்கும் இடையேயான போராட்டம் தான் நடைபெறுகின்றது என்றும் கூறுகின்றனர்.
- மக்களுகளிடம் ஆயுதங்கள் இல்லை. அவர்களின் குரல்,கைகளில் பதாதைகள் மட்டுமே இருக்கின்றன.
- மக்களுக்கு இது ஒரு நாளாந்த போராட்டமாக அமைந்துவிட்டது.
ஆனால் முரட்டுத்தனமான ஆட்சியாளரிடம் முப்படைகள், காவல்துறை மற்றும் பாதாள உலகம் என்று அனைத்து சக்திகளும் பின்புலமாக உள்ளன.அதற்கும் மேலாக கொடிய துப்பாக்கிகளும் தண்ணீர் பீச்சியடிக்கும் வாகனங்களும் கண்ணீர் புகைக்குண்டுகள் மற்றும் நிராயுதபாணிகளான மக்களைத் தாக்கவென் மேலதிகமாக தடிகளும் உள்ளன. அவர்களிடம் இல்லாதது மனசாட்சியும் மனிதாபிமானமும் மட்டுமே. இந்த அரசின் அடியாட்கள் நாட்டுக்கு சாபம் இல்லையா?
இந்த நாட்டில் வாழ்வது நிச்சயமாக ஒரு சாபமாகத் தெரிகிறது.
திருடுவதும்,கமிஷன் பெறுவதும், கொள்ளையடிப்பதும் வெளிப்படையாகவே நடைபெறுகின்றது.இந்த விடயங்களை தடுத்து நிறுத்த வேண்டிய அவசியமில்லை என்றவாறு ஆட்சியாளர் உள்ளனர்.;
- நாடு கடுமையான சாபத்திற்கு ஆளாகிறது.
எதுவும் வெற்றிபெறவில்லை. அனைத்தும் தோல்வியடைந்தன.
விவசாயம் அழிந்தது., கடன்கள் செலுத்தத் தவறியதால் நாடு திவாலானதாக அறிவிக்கப்பட்டது. எரிபொருள் இல்லை. உணவு இல்லை.பள்ளிகளுக்கு புத்தகங்கள் இல்லை. மருந்து இல்லை. வேலை இல்லை.
அதிகரிக்கப்பட்டுள்ள மறைமுக வரியை செலுத்த மக்களிடம் பணம் இல்லை .
மின்சாரம் மற்றும் பிற பொதுவான வசதிகளுக்கான கட்டணம் அதிகரித்து வருகிறது.
இலங்கை சபிக்கப்பட்டு நலிந்துவிட்டது. இந்த சாபத்தில் இருந்து நாடும் மக்களும் எப்போது விடுதலையாவர் என்ற எதிர்பார்ப்புடன் மக்கள் நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கின்றனர்.
- அழிந்த ஜனநாயகம்
அரசியலமைப்பு மற்றும் தேர்தல் சட்டங்களில் உள்ள பல பாரிய குறைபாடுகளினால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை இந்த நாட்டில் ஜனநாயகத்தின் இதயத்தை பறிக்கும் புற்று நோயாக மாறியுள்ளது. எனவே ‘இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு‘ என்பது முற்றிலும் தவறான பெயர்; அரசியல் காரணங்களுக்காக தேர்தல்கள் தாமதமாகவோ அல்லது ரத்து செய்யப்பட்டோ, மக்களுக்கு அவர்களின் வாக்குரிமை மறுக்கப்படும் எந்த நாடும் தன்னை ஜனநாயகம் என்று அழைக்க முடியாது.
கவலையளிக்கும் வகையில்இ நிறைவேற்று அதிகாரம்; நாடாளு மன்றத்தில் ஆதிக்கம் செலுத்தி அராஜகத்திற்குள் நாட்டையும் மக்களையும் ஆழ்த்தியுள்ளது.இத்தகைய போக்கினை மக்கள் தொடர்ச்சியாக பல ஜனாதிபதிகளின் கீழ் பார்க்கின்றனர். இன்று நிலைமை மோசமான நிலைக்கு திரும்பியுள்ளது.
அரசியலமைப்புச் சபை மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்கள் என அனை த்தையும் ஜனாதிபதி தனது கட்டைவிரலின் கீழ் வைத்துள்ளார்.
இலங்கை ஜனநாயகம் முன்னெப்போதும் இல்லாத வகையில் பெரும் ஆபத்தில் உள்ளது. இலங்கை எதேச்சதிகாரத்தை நோக்கிச் செல்வதாக தேர்தல் கண்காணிப்பாளர்களும் ஏனைய சிவில் சமூக அமைப்புகளும் எச்சரித்துள்ளன.
ஆனால் எதிhக்கட்சிகள் ஒன்றிணைய வேண்டிய தருணத்தில் பிரிந்து நின்று தமது பலத்தை சோதித்துப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
அண்மையில் ஜே.வி.பி எதிர்ப்பாளர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
தமது அரசியல் எஜமானர்களை மகிழ்விப்பதற்காக அணிவகுத்துச் செல்லும் பொலிஸாரின் கைகளினால்இ என்ன நடக்கப் போகிறது என்பதற்கான முன்னறிவிப்பாகவே இந்த மரணத்தைப் பார்க்க வேண்டியுள்ளது.
- கற்பழிப்பாளர்களின் காவலில் இலங்கை?
கூட்டுப் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண் பலவந்தமாக கற்பழிப்பாளர்களின் காவலில் வைக்கப்படும் அதே இக்கட்டான நிலையை இலங்கையும் காண்கிறது.
பொது நிதியை திருடுவதற்கும்இ பொருளாதாரத்தை தவறாக நிர்வகிப்பதற்கும்இ திவாலாவதற்கும் காரணமானவர்கள் தொடர்ந்து ஆட்சியில் உள்ளனர்.
இன்னும் மோசமானது வரி செலுத்துவோரின் இழப்பில் மக்களை மேலும் தியாகங்களைச் செய்து பொருளாதாரத்தை சீரமைக்க உதவுமாறு இந்தஅராஜகஅரசியல்கதாபாத்திரங்கள்வலியுறுத்துகின்றன!
பொது நிதியை திருடுவதற்கும்இ பொருளாதாரத்தை தவறாக நிர்வகிப்பதற்கும்இ நாடு திவாலாவதற்கும் தோற்றுப்போன அரசாக இல்கை வீழ்ந்து கிடப்பதற்கும் காரணமானவர்கள் தொடர்ந்தும் ஆட்சி அதிகாரத்தில் உள்ளனர்.
- பாகிஸ்தானைப் பாருங்கள்
பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் அமைச்சர்கள் மற்றும் சிறப்பு ஆலோசகர்கள் தங்கள் நாட்டின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு சம்பளம் மற்றும் சலுகைகளை கைவிட முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.
அவரைப் பொறுத்தவரை ஜூன் 2024 வரை ஆடம்பரப் பொருட்களை வாங்குவதற்கும் அனைத்து வகையான புதிய கார்களை வாங்குவதற்கும் முழுத் தடை விதிக்கப்படும்;
அமைச்சரவை உறுப்பினர்கள் பயன்படுத்தும் அனைத்து சொகுசு கார்களும் ரத்து செய்யப்பட்டு ஏலம் விடப்படும்;
அமைச்சரவை உறுப்பினர்கள் வெளிநாட்டு பயணங்களின் போது ஐந்து நட்சத்திர விடுதிகளில் தங்க மாட்டார்கள்;
அரசாங்க அதிகாரிகள் ‘கட்டாயமான வருகைகளை‘ மேற்கொள்ள மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். மேலும் அவர்கள் பொருளாதாரத்தில் பயணிப்பார்கள்; அரசு அதிகாரிகளுக்கு இனி பாதுகாப்பு கார்கள் வழங்கப்படாது; அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு புதிய நிர்வாக அலகு பிரிவு அல்லது துணைப்பிரிவு உருவாக்கப்படாது;
எரிவாயு மற்றும் மின்சாரத்தை சேமிக்க, கோடை காலத்தில் அலுவலகங்கள் காலை 7.30 மணிக்கு திறக்கப்படும்;
அரசு நிகழ்ச்சிகளில் ஒரு உணவு மட்டுமே அனுமதிக்கப்படும்; இஸ்லாமாபாத்தில் உள்ள அனைத்து அமைச்சகங்களிலும்இ பிரதமர் மாளிகையிலும் ஒரே ஒரு உணவு மட்டுமே இருக்கும்; தேநீர் நேரம் என்றால்இ தேநீர் மற்றும் பிஸ்கட் மட்டுமே வழங்கப்படும்;
அமைச்சகங்கள்இ துறைகள் மற்றும் துணைத் துறைகளின் தற்போதைய செலவு 15% குறைக்கப்படும்;
ஏக்கர் பரப்பளவில் உள்ள அரசு வீடுகள் நகர வீடுகளாக மாற்றப்படும்;
300 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள அரசு பரிசுகளை வைத்திருக்க எந்த அதிகாரியும் அல்லது அமைச்சரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்இ
ஒரு கருவூலக் கணக்கு மேலதிகமாக நிறுவப்படும்.
இலங்கை அரசாங்கம் அவ்வாறு செய்ய முடியாது என்பதற்கு எந்த காரணமும் இல்லை. எல்லாவற்றிற்கும் மேலாகஇ அதன் தலைவர்கள் தங்கள் தேசபக்தியைப் பகிரங்கமாக வெளிப்படுத்தும் வாய்ப்பையும்இ நாட்டிற்காக இறக்கத் தயாராக இருப்பதையும் ஒருபோதும் இழக்க மாட்டார்கள்.
இலங்கையின் எந்தவொரு அமைச்சராவது தனது உத்தியோகபூர்வ வாகனங்களை ஏலத்தில் விடுவதற்கு அனுமதிக்க விரும்புகின்றாரா?
. இந்த தகுதியானவர்கள் தேர்தல் நேரத்தில் லாரிகளில் பணம் செலவழிக்கும் அளவுக்கு செல்வந்தர்கள். எனவே அவர்கள் ஏன் எரிபொருளுக்கு பணம் செலுத்த முடியாது? தங்கள் வாக்காளர்களைப் போல அவர்களால் ஏன் பஸ் அல்லது ரயிலில் பயணிக்க முடியாது? அரசியல்வாதிகள் அவ்வாறு செய்யாத வரை, பொதுப் போக்குவரத்தை மேம்படுத்த வேண்டிய அவசியத்தை அவர்கள் உணர மாட்டார்கள்.
பெரும்பாலும்,பாராளுமன்ற அமர்வுகள் விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றன, மேலும் அவையில் கோரம் இருக்க சபாநாயகருக்கு கடினமாக உள்ளது.
- சுவீடனில் பிரதமருக்கு மாத்திரமே வாகனம்
மிகவும் வளர்ந்த நாடுகளில் ஒன்றான சுவீடனில்இ பிரதமரைத் தவிர வேறு எந்த மக்கள் பிரதிநிதிக்கும் அதிகாரப்பூர்வ வாகனத்திற்கு உரிமை இல்லை.
- எம்.பி.க்களுக்கு பஸ், ரயில் பாஸ்
எம்.பி.க்களுக்கு பஸ்இ ரயில் பாஸ் வழங்கப்படுகிறது. அவர்கள் தங்கள் தனிப்பட்ட வாகனங்களை அவர்களின் சொந்த செலவில் பயன்படுத்தலாம்.
- சுவீடன் சபாநாயகருக்கும் வாகனம் இல்லை.
சுவீடன் சபாநாயகருக்கு கூட உத்தியோகபூர்வ வாகனம் வழங்கப்படவில்லை.
சுவீடன் சபாநாயகருக்கு கூட உத்தியோகபூர்வ வாகனம் வழங்கப்படவில்லை. இப்படிப்பட்ட நாடுகள் வளர்ந்ததில் ஆச்சரியமில்லை. இலங்கை இன்னும் வளர்ச்சியடையாமல் இருப்பதற்கு அரசியல்வாதிகளை தெய்வமாக்குவது ஒரு முக்கிய காரணம்.
எதிர்ப்பு அரசியல் அதிகரித்து வருகிறது,இது வெளிப்படையாகத் தெரிகிறது,
நாடு முழுவதும் ஒரே நேரத்தில் வெகுஜனப் போராட்டங்கள் வெடித்தால், குழப்பத்திலிருந்து ஒழுங்கைக் கொண்டுவரவோ அல்லது தங்கள் அரசியல் எஜமானர்களைப் பாதுகாக்கவோ காவல்துறையோ அல்லது அரசாங்க சார்பு ஜெனரல்களோ எதுவும் செய்ய முடியாது.
- மக்கள் சக்திக்கு முன் பொலிஸாரும் இராணுவமும் நிகரில்லை.
பொதுமக்களின் கோபத்தின் மற்றொரு சுனாமி உருவாவதற்கான அறிகுறிகள் உள்ளனஇ மேலும் அது முழு நாட்டையும் குழப்பத்தில் மூழ்கடிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று பொரிந்து கொட்டுகின்றது தென்னிலங்கை.
ஆனால் நாடு தோற்றுப்போன அரசாக உருவெடுக்க காரணமான கர்த்தாக்களை இனம்கண்ட தென்னிலங்கை இதற்கான மூலவேரினை அடையாளப்படுத்தத் தவறிவிட்டது.
கடந்த 75 வருடங்களாக அரசோச்சியவர்களின் அரசியல் மூலதனமாக சித்தாந்தமாக இனவாதக் கோட்பாடே இருந்தது என்பதை கணக்கில் எடுக்கத் தவறிவிட்டனர் என்று கூறுவதைவிட தமது வசதிக்காக தவிர்த்துக் கொண்டனர் என்று கூறுவதுதான் பொருத்தமாக அமையும்.இது இலங்கையின் சுபீட்சத்திற்கும் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் பெரும் தடையாகவே தொடர்ந்தும் இருக்கப் போகின்றது.
மொத்தத்தில் தென்னிலங்கை வரலாறு இன்று கற்பித்துக் கொண்டிருக்கும் பாடத்தில் இருந்துகூட யதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள மறுக்கும் தென்னிலங்கை தமக்கான ஜனநாயகத்திற்கான பாதையினை செப்பனிட்டுக் கொள்ள புதிய தலைமையினை நாடி நிற்பதுடன் தனி வழிபோக தீர்மானித்துள்ளது.