கனடாவையும் அமெரிக்காவையும் தளமாகக் கொண்ட – சர்வதேச மருத்துவம் மற்றும் சுகாதார சேவை அமைப்பு” நிறுவனத்தின் கனடியப் பிரிவு நடத்திய வருடாந்த ஒன்றுகூடலும் இராப்போசன விருந்தும். கடந்த 5ம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று ஸகாபுறோ கொன்வென்சன் சென்றர் விழா மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
அமைப்பின் தலைவர் வைத்தியர் வரகுணன் அவர்கள் தலைமையுரையாற்றினார். பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி மற்றும் மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர்கள் லோகன் கணபதி மற்றும் விஜேய் தணிகாசலம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள்.
விழாவிற்கான சிறப்பு விருந்தினராக தமிழ்நாட்டிலிருந்து ‘பட்டி மன்றத் தாரகை’ பாரதி பாஸ்கர் அவர்கள் அழைக்கப்பெற்றிருந்தார்.
கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. அத்துடன் பாரதி பாஸ்கர் அவர்களின் சிறப்பான உரையில் அவர் உதவிகள் தேவைப்படுவோருக்கு உடனடி உதவிகள் வழங்கும் வகையில் அமைப்பு ரீதியாக செயற்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி சர்வதேச மருத்துவம் மற்றும் சுகாதார சேவை அமைப்பு” நிறுவனத்தின் அற்புதமான சேவையினையும் பாராட்டினார்.
அவரது உரையின் பின்னர் இராப்போசன விருந்து நடைபெற வைத்தியர் வரகுணன் அவர்கள் ஏற்பாட்டில் அவரும் ஏனைய பாடக பாடகிகளும் இனிதான பாடல்களை வழஙகிய வண்ணம் அன்றைய வருடாந்த ஒன்று கூடல் இறுதி வரை சிறப்பாக நகர்ந்து சென்றது.
படங்களும் செய்தியும்:- சத்தியன்