அகமதாபாத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியின் முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் சேர்த்தது. இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்த கேமரூன் க்ரீனும், கவாஜாவும் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தனர். இந்த இணை 5-வது விக்கெட்டுக்கு 208 ரன்கள் சேர்த்தது. க்ரீன் 114 ரன்களிலும், கவாஜா 180 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இதையடுத்து வந்த பின்கள வீரர்களும் இந்திய பந்துவீச்சை சமாளித்து ரன்களை குவித்ததால், ஆஸ்திரேலியா அணி 480 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. இந்திய அணி சார்பில் சுழல்பந்து வீச்சாளர் அஸ்வின் 6 விக்கெட்களை வீழ்த்தினார்.
மேலும் இந்திய மண்ணில் 26-வது முறையாக 5 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்தார். இதையடுத்து முதல் இன்னிங்சை தொடர்ந்த இந்தியா ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 36 ரன்கள் சேர்த்துள்ளது.