அமெரிக்க தமிழ்ப்பணிக் கழகத்தின் வழி, தமிழர் இல்லத் திருமணங்களை திருக்குறள் அறவழித் திருமணமாக, அமெரிக்காவில் நடத்தும் பெருமுயற்சியின் தொடர்ச்சியாக வட கரோலினா, அமெரிக்காவில் 13/03/2023 அன்றுதிராவிட இயக்கத்தின் வழித்தோன்றல் மானமிகு மதிவாணன்-பிரியா இல்லத் திருமணம் தமிழ்ப்பணிக் கழகத்தின் தலைவர் வா.மு.சேதுராமன்.கவிஅரசன் தலைமையில் திருக்குறள் அறவழியில் சிறப்பாக நடைபெற்றது.
தமிழத்திரு முத்துமாரி கவிஅரசன் திருமண நிகழ்வுகளை ஒருங்கிணைத்தார், மானமிகு மதிவாணன்-பிரியா வரவேற்றார்.மோகன் வைரக்கண்ணு-வட கரோலினா, சிவக்குமார் இடைச்சாமி-வாசிங்டன் டிசிதிருமறைகள் ஓதினர். அமெரிக்கத் தமிழறிஞர்கள் முனைவர் தணிக்குமார் சேரன்-வட கரோலினா, அகத்தியன் சான் பெனடிக்ட்- வாசிங்டன் டிசி, அவர்கள் முன்னிலை வகித்தனர். பத்மினி ராசன்-புளோரிடா,சசி சுதாகரன்-டெக்சாசு, சுவேதா பிள்ளிம்-நியூஜெர்சி உள்ளிட்டோர் குத்துவிளக்கு ஏற்ற, திவ்யா சைலேசுவரன்-வட கரோலினா, லட்சுமி ராசா -வாசிங்டன் டிசி, ராணிமீனா ரசினிகாந்த்-லாசு வேகசு, சண்முகபிரியா ராஜா-நியூயார்க், சுசாதா மோகன்-வட கரோலினா, வனிதா சீதப்பன்-வாசிங்டன் டிசி உள்ளிட்டோர் தமிழ்த்தாய் வாழ்த்திசைத்தனர்
தமிழத்திருவீரபாண்டியன் காளிமுத்து-வட கரோலினா, சைலேசுவரன் சுகுமாரன்-வட கரோலினா, கோவிந்தராசன்-புளோரிடா, ராசராசன்-புளோரிடா, இனிகோ பெரியதம்பி-வட கரோலினா, சீனிவாசன் ராமலிங்கம்-வட கரோலினா, ராசா முத்துச்சாமி-நியூ யார்க், ராமகிருட்டிண ராசா துரைசாமி -வாசிங்டன் டிசி, செந்தில் கிருட்டிணமூர்த்தி-அட்லாண்டா, அர்ச்சனா விசய்-அட்லாண்டாஆகியோர் மணமக்களை வாழ்த்தி சிறப்புரை வழங்கினர். வெண்முகில் மதிவாணன்-நியூயார்க், வெண்பா மதிவாணன்-வட கரோலினா அவர்களின் நன்றியுரையுடன், தமிழ் வழித் திருமணம் இனிதே நடைபெற்றது. தமிழரின் இசையான தமிழரின் பாரம்பரிய மணப்பறை முழக்கம்கரோலினா தமிழ்க் கலைக்கூடம் பறைக்குழுவினரால் இசைக்கப்பட்டது