WOMEN EMPOWERED SOCIAL CLUB அமைப்பு நடத்திய சரவதேச பெண்கள் தினக் கொண்டாட்டம்
கனடாவில் ஒன்றாரியோ மாகாணத்தில் திருமதி கவிதா செந்தில் அவர்கள் தலைமையில் இயங்கிவரும் WOMEN EMPOWERED SOCIAL CLUB பெண்களுக்கான அமைப்பு நடத்திய சரவதேச பெண்கள் தினக் கொண்டாட்டம் கடந்த 11ம் திகதி சனிக்கிழமையன்று மாலை மார்க்கம் நகரில் அமைந்துள்ள மண்டபம் ஒன்றில் நடைபெற்றது.
பெண்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் உரையாற்றுவதற்கான கனடாவின் தேசிய ஊடகவியலாளராப் பணியாற்றும் மஞ்சுளா செல்வராஜா அவர்களும் பிரதான பேச்சாளராக தமிழகத்திலிருந்து சட்டத்தரணியும் திரைப்படம் மற்றும் சின்னத்திரை நாடகங்கள் ஆகியவற்றி;ல் தனது நடிப்பாற்றலை வெளிக்காட்டி வருபவரும் பட்டிமன்றப் பேச்சாளருமான சந்தியா ஆகியோர் அழைக்கப்பெற்றிருந்தனர்.
நிகழ்ச்சித் தொகுப்பாளராக ‘அக்னி’ இசைக்குழு புகழ் சில்வியா பிரான்சிஸ் அவர்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தார்.
முதலில் நிறுவனர் உரையாற்றிய திருமதி கவிதா செந்தில் தனது உரையில் இந்த அமைப்பான நிறுவப்பட்டதற்கான காரணங்களையும் தனது விருப்பங்களையும் சிந்தனைகளையும் எடுத்துக் கூறினார்.
தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் மற்றும் உரைகள் ஆகியன இடம்பெற்றன. மண்டபம் நிறைந்த விழாவாக அமைந்த இந்த சரவதேச பெண்கள் தினக் கொண்டாடடம் அங்கு கூடியிருந்த பார்வையாளர்களையும் சிறப்பு விருந்தினர்களையும் வர்த்தகப் பிரமுகர்களையும் பரவசத்தில் ஆழ்த்தியது என்றால் அது மிகையாகாது.
மேற்படி விழாவில் கனடாவில் சேவை மனப்பான்மையோடு பல நிறுவனங்களில் பணியாற்றிவரும் கலாநிதி பார்வதி கந்தசாமி அவர்களுக்கும் தனது என்பது வயதிலும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இணைந்து முதுமானிப் பட்டத்தைப் பெற்றுக் கொண்ட திருமதி யோகரத்தினம் செல்லையா ஆகிய இருவருக்கும் ஆளுமை விருதுகள் வழங்கப்பெற்றன. மேற்படி விருதுகளை அங்கு கலந்து கொண்ட மத்திய அரசின் அமைச்சர் திருமதி ஹெலேனா ஜெக் மற்றும் மார்க்கம் மாநகரசபை மேயர் பிராங்க் ஸ்கெப்பட்டி ஆகியோர் வழங்கினார்கள்.
தொடர்ந்தும் பல கௌரவங்கள் இடம்பெற்றன.
பின்னர் இராப்போசன விருந்தோடு இந்த விழா நிறைவுற்றது.