அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணி 338 ரன்கள் குவித்துள்ளது. இதையடுத்து 339 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி அயர்லாந்து அணி விளையாடி வருகிறது. சமீபத்தில் உலக சாம்பியன் இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகளைக் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை 3-0 என்ற கணக்கில் வங்க தேச அணி கைப்பற்றி அதிர்ச்சி அளித்தது. தற்போது அயர்லாந்து கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.
இதில் முதல் போட்டி சில்ஹெட் நகரில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்து. இதையடுத்து வங்கதேச பேட்ஸ்மேன்கள் களத்தில் இறங்கினர். அந்த அணி 49 ரன்க எடுத்திருந்தபோது ஓபனிங் பேட்ஸ்மேன் இருவரையும் இழந்திருந்தது. கேப்டன் தமிம் இக்பால் 3 ரன்னிலும், லிட்டன் தாஸ் 26 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த நஜ்முல் ஹொசைன் 25 ரன்னில் வெளியேறினார்.
இன்பின்னர் ஷகிப் அல் ஹசன் – தவ்ஹித் ஹிரிடோய் ஆகியோர் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் 4 ஆவது விக்கெட்டிற்கு 135 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஷகிப் 93 ரன்னில்வெளியேற தவ்ஹீத் 92 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்தவர்களில் விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹிம் 44, யாசிர் அலி 11, தஸ்கின் அலி, நசும் அகமது தலா 11 ரன்கள் சேர்க்க 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த வங்கதேச அணி 338 ரன்களை குவித்தது. அயர்லாந்து அணியில் கிரஹாம் ஹுமே அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து 339 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி அயர்லாந்து அணி வீரர்கள் விளையாடி வருகின்றனர்.