அனைத்துலக மருத்துவ நல அமைப்பும்(IMHO-USA)இரட்ணம் பவுண்டேசன் அமைப்பினரும்(Ratnam Foundation-UK) இணைந்து ஆனைக்கோட்டை றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலைக்கு வழங்கிய திறன் பலகையின் மூலம்கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. இதற்கான திறன் வகுப்பறையொன்றும் திறந்து வைக்கப்பட்டுள்ளமை வசதி குறைந்த இம் மாணவர்களுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதமாகும்.
தரம் ஒன்று தொடக்கம் பதினொன்று வரையான வகுப்புக்களில் பயிலும் 300 மாணவர்கள் இதன்மூலம் பயன்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
திறப்பு விழா வைபவத்தில் விஞ்ஞான பாட ஆசிரியர் மாணவர்களுடன் இணைந்து திறன் பலகையை பாவித்து கற்பித்தமையும் ஆரம்ப கல்வி மாணவர்கள் திறன் பலகையில் நிகழ்த்திய கற்றல் செயற்பாடுகளும் விருந்தினர்களால் வியந்து பாராட்டப்பட்டது.
இத்திறப்பு விழாவுக்கு விருந்தினர்களாக கலந்து கொண்ட வலிகாம கல்வி வலய தகவல் தொழில்நுட்ப உதவிக்கல்வி பணிப்பாளரினால்(ADE-IT ) திறன் பலகையை உச்ச அளவில் பயன்படுத்த ஆலோசனைகள் வழங்கப்பட்டன.அனைத்துலக மருத்துவ நல அமைப்பின்(IMHO-USA) இலங்கைக்கான வதிவிட பணிப்பாளரும் தொடர் நடவடிக்கைகள் பற்றி எடுத்துரைத்தார்.