மன்னார் மெசிடோ நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ
(மன்னார் நிருபர்)
(24-03-2023)
மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட சுய தொழிலை முன்னெடுக்கும் சுயதொழில் உற்பத்தியாளர்களுக்கு அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ற வகையில் சுய தொழிலை மேற்கொள்ள சுயதொழில் மூலப் பொருட்கள் வழங்கப்படுகிறது.எனவே உங்கள் சுய தொழிலை விருத்தி செய்து உங்கள் குடும்ப பொருளாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மன்னார் மெசிடோ நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தெரிவித்தார்.
-மன்னார் மெசிடோ நிறுவனத்தில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு இன்றைய தினம்(24) சுய தொழில் மூலப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,,
எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு உலர் உணவு பொதிகளுடன் சுயதொழில் வாழ்வாதாரத்தை மேற்கொள்வதற்கான மூலப் பொருட்கள் உங்களுக்கு கிடைக்கிறது.தெரிவு செய்யப்பட்ட 180 குடும்பங்களுக்கு தொடர்ச்சியாக எதிர்வரும் 3 மாதங்களுக்கு அத்தியாவசிய உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டு வருகின்தோடு, தெரிவு செய்யப்படுகின்ற குடும்பங்களுக்கு சுயதொழில் நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
-அதன் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட 6 பயனாளிகளுக்கு உலர் உணவு பொதிகள், சுயதொழில் வாழ்வாதாரத்தை மேற்கொள்வதற்கான மூலப்பொருட்களும் மன்னார் மெசிடோ நிறுவனத்தினால் வழங்கப்பட்டுள்ளது.
-குறிப்பாக சுய தொழிலை முன்னெடுக்கும் சுயதொழில் உற்பத்தியாளர்களுக்கு அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ற வகையில் சுய தொழிலை மேற்கொள்ள மூலப் பொருட்கள் வழங்கப்படுகிறது.சுய தொழில் உற்பத்தியாளர்களின் உற்பத்தியை அதிகரிக்கவும்,பொருளாதாரத்தை உயர்த்தவும் நாங்கள் குறித்த நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம்.
அதன் அடிப்படையில் சுய தொழில் உற்பத்திக்காக 15 ஆயிரம் ரூபாய் மூலப் பொருட்களை ஒவ்வொருவருக்கும் வழங்கி வைத்துள்ளோம்.இதனால் உங்கள் குடும்ப வருமானத்தை நிலையாக வைத்துக் கொள்ள உதவியாக இருக்கும்.
-எனவே மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 180 பேருக்கும் குறித்த உதவி திட்டத்தை தொடர்ச்சியாக வழங்கி வருகிறோம்.
எனவே உங்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ள சுய தொழில் உற்பத்திகான உதவி திட்டத்தை உரிய முறையில் பயன்படுத்தி சுய தொழில் நடவடிக்கையில் அனைவரும் முன்னேற்றம் அடைய வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
குறித்த நிகழ்வில் விற்றோல் திட்டத்தின் வடமாகாண கண்காணிப்பு இணைப்பாளர் ரெக்ஸ் மற்றும் மெசிடோ நிறுவனத்தின் பணியாளர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.